- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை - நல்ல செலக்சன்தான், ஆனா டைரக்டர் ரொம்ப...

நடிகர் தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை – நல்ல செலக்சன்தான், ஆனா டைரக்டர் ரொம்ப உஷாரா இருக்கணுமே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் பிஸியாக ஒரு நடிகராக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் குபேரா ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் இயக்கிய நடித்த இட்லி கடை படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது.

நடிகர் தயாரிப்பாளர் பாடகர் என பன்முக திறமை கொண்ட நடிகர் தனுஷ் இயக்குனராகவும் இப்போது ஜெயித்துக்கொண்டு இருக்கிறார். ப பாண்டி ராயன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய 3 படங்களை அவர் இயக்கியதை தொடர்ந்து இப்போது இட்லி கடை படத்தை தனுஷ் 4வது படமாக டைரக்ட் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் இஸ்க் மேரே மெய்ன் என்ற இந்தி படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். இட்லி கடை படமும் அந்த படமும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதற்கிடையே இப்போது நடிகர் தனுஷ் போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நடிகர் தனுஷ் அடுத்து நடிக்க உள்ள படத்திற்கான ப்ரீ புரடக்சன் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி டைரக்‌ஷனில்தான் நடிகர் தனுஷ் நடிக்க ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பே கமிட் ஆகி விட்டார். இப்போது விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடிக்க இருக்கிறார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. மீனாட்சி சௌத்ரி ஏற்கனவே நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். அதே போல் லக்கி பாஸ்கர் படத்திலும் தொடர்ந்து சங்கராந்தி வஸ்துனம் ஆகிய வெற்றிப் படங்களிலும் அவர் நாயகியாக நடித்திருக்கிறார்.

ஆனால் தி கோட் படத்தில் விஜயின் காதலியாக சில காட்சிகளில் மட்டுமே தன்னை காட்டி அந்த படத்தில் தன்னை டம்மி ஆக்கி விட்டதாக அந்த படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு மீது நடிகை மீனாட்சி சௌத்ரி வெளிப்படையாக புகார் கூறியிருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் தனுஷ் படத்தில் மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடித்தால் இயக்குனர் ரொம்பவும் கவனமாக அவரது கேரக்டரை படத்தில் காட்ட வேண்டும். அதில் உஷாராக இல்லை என்றால் மறுபடியும் டைரக்டர் மீது புகார் வந்துவிடும் என்று ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்