- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதுவரை இல்லை, இதுதான் எனக்கு முதல் முறை, லக்கி பாஸ்கர் பட நாயகி மீனாட்சி சௌத்ரி...

இதுவரை இல்லை, இதுதான் எனக்கு முதல் முறை, லக்கி பாஸ்கர் பட நாயகி மீனாட்சி சௌத்ரி ஓபன் டாக்!

- Advertisement -

சொற்பமான எண்ணிக்கை படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து வருகின்றனர். அதில் ஒருவர்தான் நடிகை மீனாட்சி சௌத்ரி. மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர். கடந்த 2021ம் ஆண்டில் வெளியான தெலுங்கு படம் இசட வாகனமுலு நிலுபரடு என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். குண்டூர் காரம் படத்தை தொடர்ந்து தமிழில் ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் மீனாட்சி செளத்ரி நடித்திருந்தார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

- Advertisement -

அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில், மகன் விஜய்க்கு ஜோடியாகவும், நடிகர் பிரசாந்த் மகளாகவும் மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே மீனாட்சி சௌத்ரி காணப்படுவார். படம் முழுவதும் விஜயே ஆக்கிரமித்துக்கொண்டார்.

அதனால் விஜய் போன்ற டாப் ஸ்டார் நடிகர் படத்தில் நடித்தும் மீனாட்சி சௌத்ரிக்கு தமிழில் பெரிய வரவேற்பும், கவனமும் கிடைக்கவில்லை. இந்த சூழலில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்தில், மீனாட்சி சௌத்ரிக்கு நல்ல வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்தது.

- Advertisement -

இந்த படத்தில் துல்கர் சல்மான் மனைவியாக, ஒரு பிள்ளைக்கு தாயாக அவர் நடித்திருப்பார். வறுமையான வாழ்க்கையை எதிர்கொள்ளும் சராசரி மனைவியாக அவர் ஆரம்பத்திலும், பிறகு வசதியான பிறகும் தன் கணவரின் தலைகணத்தை சுட்டிக்காட்டும் ஒரு பக்குவப்பட்ட கேரக்டரிலும் மீனாட்சி சௌத்ரி நடிப்பு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

இப்போது நடிகை மீனாட்சி சௌத்ரி தெலுங்கு படம் சங்கராந்திகி வஸ்துனம் என்ற படத்தில், நடிகர் வெங்கடேஷ் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் முடிவடைந்த நிலையில் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதன் பிரமோசன் நிகழ்ச்சிகளில் மீனாட்சி சௌத்ரி பங்கேற்று வருகிறார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த படத்தில் முதல் முறையாக நான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளேன். இதில் நான் ஆக்சன், காமெடி என இரண்டுவிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளேன். இதுவரை இப்படிப்பட்ட கேரக்டரில் நான் நடித்தது இல்லை. இதுவே முதல் முறை என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்