- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு எதிராக பேசிய நடிகர்.. மகன் திட்டியதால் ஜகா வாங்கிவிட்டார்.. எப்படியெல்லாம் நடக்குது பாருங்க

விஜய்க்கு எதிராக பேசிய நடிகர்.. மகன் திட்டியதால் ஜகா வாங்கிவிட்டார்.. எப்படியெல்லாம் நடக்குது பாருங்க

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே ஓடிக்கொண்டிருக்கும் பஞ்சாயத்து என்றால் அது ரஜினி டாப்பா இல்லை விஜய் டாப்பா என்பதுதான். விஜய் ரசிகர்கள் எங்கள் தளபதிதான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்ல; ரஜினி ரசிகர்களோ எங்கள் தலைவர்தான் எப்போது நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று சொல்ல சிந்துபாத் கதை போல் நீண்டுகொண்டே செல்கிறது அவர்களின் வாதம்.

இப்படிப்பட்ட சூழலில் ஜெயிலர் படம் ரிலீஸானது. படம் மெகா ஹிட்டாகி மொத்தம் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்தான் வசூல் சக்கரவர்த்தி என அவரது ரசிகர்கள் ஆட்டத்தை முதிலிலிருந்து ஆரம்பித்தனர். அதற்கு விஜய் ரசிகர்களோ லியோ படம் வரட்டும் ஜெயிலர் ரெக்கார்டை ஒரே வாரத்தில் அடித்து துவம்சம் செய்துவிடும் என்று பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்த சூழலில் நடிகர் மீசை ராஜேந்திரன் கடந்த சில காலமாகவே விஜய்க்கு எதிராக பேசிவருகிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில் ஜெயிலர் படம் செய்த வசூல் சாதனையை விஜய் நடித்திருக்கும் லியோ படம் தாண்டட்டும் நான் எனது மீசையை எடுத்துக்கொள்கிறேன் என்று ஒரே போடாக போட்டார். மேலும் விஜய் எல்லாம் நல்ல மனிதரே கிடையாது என தொடர்ந்து விமர்சன கனைகளை வீசிக்கொண்டே இருந்தார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்க்கும் ஆதரவாக பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், “ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் வேட்டை நடத்தியது. இதன் காரணமாக சுமார் மூன்று லட்சம் குடும்பங்கள் வாழ்ந்தன. அதேபோல் விஜய் நடித்த லியோ படமும் பெரிய வசூல் வேட்டை நடத்தி அதனால் மூன்று லட்சம் குடும்பங்கள் வாழ்ந்தால் சந்தோஷம்தான்.

எனது மகனேக்கூட விஜய் ரசிகர்தான். டாக்டரான அவன் என்னிடம் ஒருமுறை ஏன் அப்பா தொடர்ந்து விஜய்க்கு எதிராகவே பேசுறீங்க என கேட்கிறார். ரஜினிகாந்த்துடன் விஜய்யை ஒப்பிட்டு அவரது ரசிகர்கள் பேசுவதும் ரஜினியை மட்டம் தட்டிவிட்டு விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்க வேண்டும் என சொல்வதும் ரொம்பவே தப்பான விஷயம். தனது ரசிகர்களை விஜய் அந்த விஷயத்தில் உடனடியாக கண்டிக்க வேண்டும். அதேபோல் லியோ படத்துக்கு போட்டியாக பல படங்கள் வெளியாகின்றன. எனவே ஜெயிலர் கலெக்‌ஷனை லியோ முறியடிப்பது சந்தேகம்தான்” என்றார்.

சற்று முன்