- Advertisement -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் இன்று காலை வெளியான நிலையில் முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் பல முக்கிய திரை பிரபலங்கள் பார்த்து ரசித்தனர். அதுவும் ரஜினியின் முன்னாள் மருமகன் நடிகர் தனுஷ் மற்றும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரே தியேட்டரில் வந்து படத்தை பார்த்தனர். அத்துடன் தனது தாத்தா ரஜினிகாந்த் நடித்த படத்தை பார்க்க மூன்று பேரன்களும் ரோகிணி தியேட்டருக்கு தனது பாட்டி லதா ரஜினிகாந்த் உடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறையும் இப்படி ரசிகர்களுடன் அவரது படம் பார்ப்பதே ஒரு எமோஷனலான விஷயம் என்று லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.





