- Advertisement -
Homeபொழுதுபோக்குகே.பாக்யராஜ் பூர்ணிமா திருமண வரவேற்பு விழாவுக்கு திடீரென வந்த முதல்வர் எம்ஜிஆர் - முதலில்...

கே.பாக்யராஜ் பூர்ணிமா திருமண வரவேற்பு விழாவுக்கு திடீரென வந்த முதல்வர் எம்ஜிஆர் – முதலில் அதை செய் என்று தனது கலையுலக வாரிசை திட்டிய புரட்சித் தலைவர்!

- Advertisement -

கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராகவும் வெற்றிப் படங்களின் இயக்குனராகவும் வலம் வந்தவர் கே பாக்யராஜ். அவர் எம்ஜிஆரின் மிக தீவிரமான ரசிகராக இருந்தார். அவர் மீது அளவுக்கு அதிகமான அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அதேபோல் பாக்யராஜ் மீது எம்ஜிஆருக்கும் தனிப்பட்ட அன்பும் பிரியமும் உண்டு. அதனால் தான் அவரை தனது கலையுலக வாரிசு என்றும் எம்ஜிஆர் பகிரங்கமாக அறிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, எனக்கும் பூர்ணிமாவுக்கும் திருமணம் என்று நிச்சயம் ஆனவுடன் அம்மன் கோவிலில் திருமணம் செய்யலாம் என்று பேசியிருந்தோம். இதுகுறித்து நான் எம்ஜிஆரை சந்தித்தபோது அவரிடம் கூறினேன். உடனே தனது உதவியாளருக்கு போன் செய்து திருவேற்காடு அம்மன் கோயிலில் திருமண ஏற்பாடுகளை செய்யுமாறு கூறினார். மேலும் திருமணத்தை நானே முன் நின்று நடத்துகிறேன் என்றும் கூறிவிட்டார்.

- Advertisement -

அவரே அப்படி கூறிய பிறகு எனக்கு எதுவுமே பேச வழியில்லை. நான் உடனே அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வந்து விட்டேன். அதன்படியே எம்ஜிஆர் எங்களது திருமணத்தை அவரது தலைமையில் மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார். திருமணத்துக்கு பிறகு சில நாட்கள் கழித்து ரிஷப்சன் வைத்தேன். அப்போது நான் அவரை மீண்டும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் அவரிடம் போய் எதுவும் சொல்லவில்லை.

ரிசப்ஷனுக்கு மற்றவர்களை மட்டும் அழைத்து இருந்தேன். ஆனால் திடீரென அவரும் ரிசப்ஷனுக்கு வந்துவிட்டார். எனக்கு பதறிப்போய் விட்டது. அங்கே கூட்டம் நிரம்பி வழிந்தது. என்னை பார்க்க வந்தவுடன் எம்ஜிஆர், ஏன் வீட்டில் ஆட்களை போட மாட்டியா? ஒரே ஒரு சின்ன பையனை மட்டும் விட்டுவிட்டு வந்திருக்கிறே? பெரிய ஆட்களாக நான்கைந்து பேரை வீட்டில் எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொள் என்று என்னிடம் சொன்னார்.

- Advertisement -

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் இப்படி சொல்கிறார் என்றும் தெரியவில்லை. ரிஷப்சன் முடிந்த பிறகு இரவு வீட்டுக்கு வந்த போதுதான் நடந்ததே என்னவென்று தெரிந்தது. எம்ஜிஆர் அன்று காலை நேராக எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது பாபு என்கிற ஒரு சின்ன பையன் மட்டுமே வீட்டில் இருந்திருக்கிறான். அப்போது வீட்டில் யாருமே இல்லையா என்று விசாரித்த எம்ஜிஆர் பூஜை அறை எங்கே இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்.

இடுப்பு உயரத்துக்கு பெரிய இரண்டு வெள்ளி குத்து விளக்குகளை திருமண பரிசாக எங்களுக்கு கொண்டு வந்திருக்கிறார். அதை அவரே பூஜை அறையில் கொண்டு வந்து வைத்துவிட்டுதான் ரிசப்ஷனுக்கு வந்திருக்கிறார். அப்போதுதான் வீட்டில் பெரிய ஆட்கள் யாரும் இல்லையா என்று என்னிடம் கடிந்து கொண்டார் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் குறித்து கே பாக்யராஜ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்