- Advertisement -
மலையாள பட இயக்குனர் மற்றும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் பரிபாடி என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தை அவரே எழுதி இயக்குகிறார். மேலும் கதாநாயகனாகவும் அவரே நடிக்கிறார். காவ்யா பிலிம் கம்பெனி இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் முக்கிய அம்சமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அவர் மலையாள சினிமாவில் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பின்னணி இசையும் வழங்கிய யுவன் சங்கர் ராஜா இசை இனி மலையாள ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி கன்னடம் என 5 மொழிகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.





