- Advertisement -
Homeபொழுதுபோக்குபோடு வெடிய.. சிவகார்த்திகேயனுடன் களமிறங்கும் சூப்பர் ஸ்டார்ர்?.. யப்பா வேற மாதிரி இருக்குமே

போடு வெடிய.. சிவகார்த்திகேயனுடன் களமிறங்கும் சூப்பர் ஸ்டார்ர்?.. யப்பா வேற மாதிரி இருக்குமே

- Advertisement -

சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமான சிவகார்த்திகேயன் தனுஷ் மூலம் சினிமாவுக்குள் வந்தார். பிறகு மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் படிப்படியாக திறமையை வளர்த்துக்கொண்டார். இருந்தாலும் சிவகார்த்திகேயன் வெகு சீக்கிரத்திலேயே காணாமல் போய்விடுவார் என்று பலரும் பேசினர்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அவர் தனது பாதையில் மட்டும் கவனம் செலுத்தி இன்று டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அதிலும் அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து நூறு கோடி ரூபாயை வசூலித்தன. இதனால் சிவகார்த்திகேயன் காணாமல் போய்விடுவார் என்று ஆரூடம் கூறியவர்கள் அடங்கி போயினர்.

- Advertisement -

அதனையடுத்து அவர் நடித்த பிரின்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து நடித்த மாவீரன் படம் சூப்பர் ஹிட்டடித்தது. கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார்.

இதற்கிடையே இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பே அயலான் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அந்தப் படமும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. இந்திய சினிமாவில் ஏலியனை மையப்படுத்தி முதன்முறையாக அயலான் படமே உருவாகியிருக்கிறது. அதன் காரணமாக படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

- Advertisement -

சிவகார்த்திகேயனின் கரியரில் முக்கிய கட்டமாக அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்திய அளவில் பிரபலமான இயக்குநர் முருகதாஸ். நிச்சயம் அவரது கதையில் எஸ்கே பட்டையை கிளப்புவார் சிவாவின் ரசிகர்கள் நம்புகின்றனர். சமீபத்தில்தான் அந்தப் படத்துக்கான பூஜை போடப்பட்டது. அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

இந்நிலையில் அந்தப் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி எஸ்.கே – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கவிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் தொடங்கவிருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

- Advertisement -

சற்று முன்