- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள சூப்பர் ஆக்டர் மோகன்லால் செய்த அந்த விஷயம், தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஏற்பட்ட வருத்தம்...

மலையாள சூப்பர் ஆக்டர் மோகன்லால் செய்த அந்த விஷயம், தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஏற்பட்ட வருத்தம் – நம்ம நடிகர்களுக்கு இது தோணலையேப்பா

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களது அபிமான நடிகர்களை தோளில் வைத்து சுமக்காத குறையாக கொண்டாடி மகிழ்கின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத்குமார், விஜய், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன் என பல லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அபிமான நடிகர்களின் புகழ் பாடிக்கொண்டே இருக்கின்றனர்.

பெரும்பாலான ரசிகர்களின் நிறைவேறாத கனவு, ஆசை என்னவென்றால் பெரும்பாலும் இதுவாக தான் இருக்கிறது. அதாவது தனது அபிமான நடிகரை ஒருமுறை நேரில் பார்த்துவிட வேண்டும். அவருடன் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். அது ஒன்றுமட்டும்தான் அவர்களது வாழ்நாள் லட்சியம். அது கிடைத்துவிட்டாலே அவர்களுக்கு போதும்.

- Advertisement -

அதை புரிந்துக்கொண்ட ஒரு சில நடிகர்கள் மட்டும், ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி தருவர். ரஜினிகாந்த் அரசியல் ஆரம்பிக்கும் ஆர்வத்தில் இருந்த காலகட்டத்தில், ராகவேந்திரா மண்டபத்துக்கு முக்கிய ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து, அருகில் நின்று புகைப்படம் எடுக்க அனுமதித்தார். கமலுடன் புகைப்படம் எடுப்பது அவ்வளவு சாத்தியமல்ல. சமீபத்தில் கூட அவர் பிறந்தநாளுக்கு வந்த ரசிகர்களை 10 அடி தூரத்தில் தள்ளி நிற்க வைத்து, ஆண்டவராக மட்டுமே காட்சியளித்து அனுப்பி வைத்தார்.

விஜயகாந்த், அஜீத்குமார் போன்றவர்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகு தனக்காக காத்திருக்கும் ரசிகர்களை தனித்தனியாக அழைத்து பல மணி நேரமானாலும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டுதான் போவது வழக்கம். சத்யராஜ், ரசிகர்களை தன்னருகே அழைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதிப்பார். சரத்குமாரும் விதிவிலக்கல்ல. அவரும் ரசிகர்களை மதிப்பவர். ராகவா லாரன்ஸ் புகைப்படம் எடுக்க விரும்பினால் உங்கள் ஊரிலேயே திருமண மண்டபம் ஏற்பாடு செய்யுங்கள். நானே அங்கு வருகிறேன். ரசிகர்களாகிய நீங்கள் சென்னைக்கு வந்து அலைய வேண்டாம் என்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் கேரளாவில் மலையாள நடிகர் மோகன்லால் செய்த ஒரு விஷயம், தமிழ் சினிமா நடிகர்களுக்கு நோஸ்கட் கொடுப்பது போல அமைந்திருக்கிறது. தனது ரசிகர்களுக்காக ஒரு முழுநாளை ஒதுக்கிய அவர், தனது ரசிகர்களை ஓரிடத்துக்கு வரச்சொல்லி அன்று முழுவதும் அவர்களுக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ஒரே நாளில் 5,641 பேருக்கு போட்டோவுக்கு போஸ் தந்திருக்கிறார் மோகன்லால்.

அதேபோல் நடிகர் சுதீப், தனது ரசிகர்களுக்காக ஒரு கிரிக்கெட் கிரவுண்டையே ஏற்பாடு செய்து அங்கு வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை, தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதித்து இருக்கிறார். திரையில் காணும் தங்களை நேரில் காணும்போது ரசிகனுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி, தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அவர்கள் காட்டும் ஆர்வத்தை அந்த நடிகர்கள் ரசிப்பதால்தான் இந்த ஏற்பாடுகளை செய்கின்றனர். இதுபோல் ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்றவர்கள் செய்ய முன்வரலாம். ஆனால், அந்த நாளில் கால்ஷீட் தந்தால் கோடிக்கணக்கில் வருமானம் சம்பாதிக்கலாமே என்றுதான் அவர்களுக்கு தோன்றும்.

- Advertisement -

சற்று முன்