- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது சத்தியமா நான் இல்ல, அந்த மாதிரி செய்கிற அவசியம் எனக்கு இல்லே, தயவு செஞ்சு...

அது சத்தியமா நான் இல்ல, அந்த மாதிரி செய்கிற அவசியம் எனக்கு இல்லே, தயவு செஞ்சு நம்பாதீங்க – பரபரப்பாக வீடியோ வெளியிட்ட பிரபல காமெடி நடிகர்

- Advertisement -

தொழில் நுட்ப வளர்ச்சி என்பது மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவுகிறது. மனிதர்கள் அலைந்து திரிந்து செய்ய வேண்டிய பல வேலைகளை, ஆண்ட்ராய்டு போன் மூலம் சில நிமிடங்களில் மிக சுலபமாக இருந்த இடத்தில் இருந்தே முடித்து விட முடியும். இதனால் நேரமும் மிச்சம். மனித ஆற்றலும் வீணாகுவதில்லை.

ஆனால் இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு மக்கள் பயன்படுத்தும் நிலையில், சில சமூக விரோதிகள், கிரிமினலாக யோசிக்க கூடிய நபர்கள் மிக தெளிவாக மோசடி வேலைகளுக்கு பயன்படுத்தி, பலரை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொஞ்சம் ஏமாந்தால் மொத்த பணத்தையும் சுருட்டி விடுகின்றனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் சிங்கம் புலி. இவர் நடிகர் அஜித்குமார் நடித்த ரெட் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். அதேபோல் நடிகர் சூர்யா – ஜோதிகா நடித்த மாயாவி படத்தை இயக்கியவரும் சிங்கம் புலி தான். இயக்குனராக இருந்த அவர் ஒரு கட்டத்தில் காமெடி நடிகராக மாறினார்.

குறிப்பாக மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட யதார்த்த நபராக, சூப்பரான தனது நடிப்பை வெளிப்படுத்தியவர் சிங்கம் புலி. தொடர்ந்து மனம் கொத்தி பறவை, முத்துக்கு முத்தாக, தேசிங்கு ராஜா, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் உள்ளிட்ட பல படங்களில் மிகச்சிறப்பாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிங்கம் புலி. சைக்கோ படத்தில் சிங்கம் புலியை வித்யாசமாக நடிக்க வைத்திருந்தார் டைரக்டர் மிஷ்கின்.

- Advertisement -

இந்நிலையில் டைரக்டர் மற்றும் நடிகர் சிங்கம்புலி பரபரப்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த சில தினங்களாக பேஸ்புக்கில் எனது பெயரில் போலியான அறிவிப்பு வெளியிட்டு எனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி சிலர் பணம் பெற்று மோசடி செய்கின்றனர்.

நான் நலமாக உள்ளேன். நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. பணம் பெறுகின்ற சூழ்நிலையிலும் நான் இல்லை. யாரும் இதை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். பொய்யான பேஸ்புக் முகவரியை பயன்படுத்தி சிலர் ஏமாற்றி பிழைக்கிறார்கள். அதற்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் கவனமாக இருங்கள், எனத் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்