- Advertisement -
Homeபொழுதுபோக்குநல்லவேளை, அப்படி ஒரு விஷயத்துக்கு நடிகை நயன்தாரா ஓகே சொல்லலே - மூக்குத்தி அம்மன் 2...

நல்லவேளை, அப்படி ஒரு விஷயத்துக்கு நடிகை நயன்தாரா ஓகே சொல்லலே – மூக்குத்தி அம்மன் 2 பட பூஜையில் இப்படி ஒரு ஏற்பாடு இருந்ததா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கேரளாவில் லோக்கல் டிவி சேனல் ஒன்றில் காம்பியராக இருந்த அவரை, மலையாளத்தில் மானசிகாரே என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பிறகு தமிழில் ஐயா படத்தில் அவரை நாயகியாக இயக்குனர் ஹரி அறிமுகம் செய்து வைத்தார். முதல் படத்திலேயே சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார்.

பிறகு ரஜினிகாந்த் விஜய் அஜீத்குமார் தனுஷ் சூர்யா என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து நயன்தாரா பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றார். பிறகு மாயா அறம் நெற்றிக்கண் இமைக்கா நொடிகள் போன்ற சில படங்களில் கதையின் நாயகியாக நடித்து முன்னணி நடிகையாக அவரது இமேஜ் உயர்ந்தது.

- Advertisement -

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி சம்பளம் வாங்கி வரும் நயன்தாரா, 2 தினங்களுக்கு முன் இனி மேல் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம். நயன்தாரா என்று அழைத்தால் மட்டுமே போதும் என்றும் அறிக்கை வெளியிட்டார். இதே பாணியில் ஏற்கனவே அஜீத்குமார் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது நடிகை நயன்தாரா, இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார். ஏற்கனவே அவர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்து அந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்போது ரூ. 100 கோடி பட்ஜெட்டில் 2ம் பாகத்தை தயாரிக்கிறது.

- Advertisement -

இரு தினங்களுக்கு முன் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு பூஜை மற்றும் படத் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகைகள் நயன்தாரா மீனா குஷ்பு ரெஜினா கசாண்ட்ரா யோகிபாபு உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

இந்த படபூஜை துவக்க விழா மேடைக்கு, நடிகை நயன்தாராவை பல்லக்கில் சிலர் சுமந்து வருவது போலவும், மேடையில் இருந்து அவர் பல்லக்கை திறந்து வெளியே வருவது போலவும் மாஸ் என்ட்ரி தர வைக்க படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனால் அது ஓவர் பில்டப் ஆக தெரியும் என நயன்தாரா மறுத்த நிலையில், கடைசியில் அந்த பல்லக்கில் அம்மனின் கிரீடத்தை எடுத்துவரச் செய்திருக்கின்றனர். நயன்தாரா மட்டும் அப்படி பல்லக்கில் வந்திருந்தால் இணையத்தில் செம வைரலாகி இருக்கும். ஆனால் புத்திசாலித்தனமாக அதை அவர் மறுத்துவிட்டார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்