- Advertisement -
தவெக அரசு குறித்து திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, பேரறிஞர் அண்ணா ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட இயக்கம் தொடர்ந்து காத்து வந்த மாநில உரிமைகளை எரித்து சாம்பலாக்கி இருக்கிறது தவெக அரசு என்று கூறியிருக்கிறார். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை எம்பி கனிமொழி கடுமையாக சாடி இருக்கிறார்.





