- Advertisement -
செய்தியாளர்களை சந்தித்த எம்பி கனிமொழி கூறியதாவது, புகார் அளிக்க வந்தவரை தாக்கி சித்ரவதை செய்துவிட்டு அதனை தற்கொலை என தவெக அரசு நாடகமாடி இருக்கிறது. இன்னும் எத்தனை உண்மைகளை இந்த அரசு மறைக்கப் போகிறது? சமரசம் செய்து கொள்ள 3 லட்சம் ரூபாயும் அரசு வேலையும் தருவதாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள் என பாலகிருஷ்ணன் மனைவி சுதா குற்றம் சாட்டி இருக்கிறார். இதற்கு அரசு என்ன பதில் அளிக்க போகிறது? செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் இறந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.





