- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதென்ன இன்கிரிமெண்ட் மாதமா, ஆளாளுக்கு சம்பளத்தை இப்படி ஏத்திக்கிட்டே போறாங்களே - அனிரூத் சம்பளம் இனி...

இதென்ன இன்கிரிமெண்ட் மாதமா, ஆளாளுக்கு சம்பளத்தை இப்படி ஏத்திக்கிட்டே போறாங்களே – அனிரூத் சம்பளம் இனி எவ்ளோ தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில், நடிகர் நடிகையர் ஒரு படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம் என்பது சாதாரண மக்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத, பெருந்தொகையாக இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் அதில் ஒரு சதவீதத்தை கூட நெருங்க முடியாத ஒரு விளிம்புநிலை வருமானத்தில் தான், இந்தியாவில் ஏராளமான மக்கள் இன்றும் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.

இன்றைய நிலவரப்படி ரஜினி, ஜெயிலர் படத்துக்கு வாங்கிய சம்பளம் ரூ. 110 கோடி. இப்போது நடித்துவரும் ரஜினி 170 படத்தின் சம்பளம் ரூ.90 கோடி. இது லைகா தயாரிப்பு நிறுவனத்துக்கான சிறப்பு சலுகை. ஏனெனில், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கும் லால் சலாம் படத்தை, லைகா நிறுவனம்தான் தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினி 171 படத்தில் ரஜினி சம்பளம் நிச்சயம் உயர்த்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

இப்போது உலகநாயகன் கமல்ஹாசன் பெறுகிற சம்பளம் ஒரு படத்துக்கு ரூ. 150 கோடி ரூபாய். பிக்பாஸ் நிகழ்ச்சியில், வாரம் ஒருநாள் படப்பிடிப்பில் பங்கேற்க மூன்று மாதங்களுக்கான சம்பளம் ரூ. 150 கோடி தான். அத்துடன், இந்தியன் 2 படத்தின் ரீ ஷூட்டிங்காக அவர் பெற்ற சம்பளம் ரூ. 120 கோடி. இந்தியன் 2 படத்துக்காக முதலில் பேசிய சம்பளத்துடன், மொத்தம் ரூ. 150 கோடி ரூபாய்.

லியோ படத்துக்காக விஜய் பெற்ற சம்பளம், ரூ. 125 கோடியாக இருந்த நிலையில், வெங்கட்பிரபு இயக்கி வரும் விஜய் 68 படத்துக்காக அவர் பெற்ற சம்பளம் ரூ. 200 கோடி ரூபாய். அஜீத் சம்பளம், தற்போது 105 கோடி ரூபாய். அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில், அவரது சம்பளம், ரூ. 160 கோடி ரூபாய்.

- Advertisement -

இதற்கிடையே இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன், தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. முதலில் ஒரு படத்துக்கு ரூ. 5 கோடி முதல் 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய அனிரூத், இனி ஒரு படத்தில் இசையமைக்க ரூ. 10 கோடி தனது சம்பளம் என நிர்ணயித்துவிட்டார்.

ஏனெனில் ஜெயிலர் படத்தின் பின்னணி இசை, படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக இருந்து, படத்தை தூக்கி நிறுத்தியது. அதே போல், லியோ படத்திலும் அனிரூத் இசைதான் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. லியோ படத்தை மோசமான நிலையில் இருந்து காப்பாற்றியதில் பெரும்பங்கு, அனிரூத் இசையே காரணம் என்ற விமர்சனம் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து, தனது சம்பளத்தை ரூ. 10 கோடியாக அனிரூத் உயர்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்