- Advertisement -
Homeபொழுதுபோக்குதோல்வி பட இயக்குனருக்கு வாய்ப்பு தந்த சண்முக பாண்டியன் - கேப்டன் மகனை பார்த்து சிவகார்த்திகேயன்,...

தோல்வி பட இயக்குனருக்கு வாய்ப்பு தந்த சண்முக பாண்டியன் – கேப்டன் மகனை பார்த்து சிவகார்த்திகேயன், சூரி திருந்துவாங்களா?

- Advertisement -

தமிழ் சினிமா நடிகர்கள் நல்ல இயக்குனர்கள் படங்களில் நடித்து வெற்றி பெறுகின்றனர். அந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைக்கிற பட்சத்தில், அவர்கள் உச்சாணிக் கொம்பில் ஏறி விடுகின்றனர். பிறகு அவர்கள் கேட்பதுதான் சம்பளம். அதுவரை வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று கொடுத்த சம்பளத்தை வாங்கியவர்கள், பிறகு கேட்ட சம்பளம் வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் படங்கள்தான். அவரது சினிமா வளர்ச்சி பயணத்தில், இந்த 2 படங்களும் பெரிய அளவில் அவரை ஏணியாக இருந்து தூக்கி விட்டது. அதே போல் இந்த படங்களில் நடித்த காமெடி நடிகர் சூரிக்கும் இந்த படங்கள் பெரிய அடையாளம் தந்து, இமேஜை வேற லெவலுக்கு மாற்றியது.

- Advertisement -

இப்போது ஒரு படத்துக்கு எட்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு சூரி உயர்ந்ததற்கும், ஒரு படத்தில் நடிக்க 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு சிவகார்த்திகேயன் உயர்ந்ததற்கும், அவர்களை வைத்து படம் இயக்கிய பொன்ராம் ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்றால் அது பொய்யல்ல. இயக்குனர் சிகரம் கே பாலசந்தரை இன்றும் ரஜினியும், கமலும் மேடை தோறும் தங்களது குருநாதர் என பாராட்டக் காரணம், தங்களது ஆரம்ப கால வளர்ச்சிக்கு அவர் ஏணியாக இருந்தார் என்ற நன்றி மறவாமைதான்.

சீமராஜா, டிஎஸ்பி போன்ற தோல்வி படங்களை தந்த பொன்ராமுக்கு, இப்போது படங்களே இல்லாத சூழலில் இருந்து வருகிறார். இந்நிலையில் டிஎஸ்பி படம் எடுத்த விஜய் சேதுபதியை வைத்து மீண்டும் படம் இயக்க நினைத்தார். அதுவும் கை கூடவில்லை. பிறகு சிவகார்த்திகேயனிடம் கேட்டுப்பார்த்தார். அவரிடமும் சரியான பதில் இல்லை. சூரியை சந்தித்து கேட்ட போது, அண்ணே, இப்போதைக்கு முடியாதுண்ணே, கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கு என அவரும் மறுத்துவிட்டார்.

- Advertisement -

இப்படி தங்களை வைத்து படம் இயக்கி வெற்றிப் படங்களை கொடுத்த பொன்ராமை சிவகார்த்திகேயனும், சூரியும் புறக்கணித்து விட்டனர். பொன்ராம், ஒரு கட்டத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை போய் சந்தித்து இருக்கிறார். அவர் தோல்வி படங்களை தந்த டைரக்டர் என்ற கண்ணோட்டம் இல்லாமல் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களை தந்த வெற்றிப் பட இயக்குனர் என்ற முறையில் அவரை வரவேற்ற சண்முக பாண்டியன், உடனே அவரது இயக்கத்தில் நடிக்க ஒத்துக்கொண்டு இருக்கிறார்.

இதையடுத்து விரைவில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், கேப்டன் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படபூஜை துவக்க விழா குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அப்பா விஜயகாந்தை போலவே, மகன் சண்முகபாண்டியனுக்கும் தோல்வியடைந்தவர்களை கைதூக்கி விடும் பெரிய குணம் இருக்கிறது என பலரும் பாராட்டி வருகின்றனர். ஏற்றி விட்ட ஏணியை மறந்த சிவகார்த்திகேயன், சூரி போன்றவர்கள் கேப்டன் மகனை பார்த்து நல்ல குணத்தை கத்துக்குங்க என்றும் பலர் பங்கம் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்