- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் 11ம் வகுப்பில் பெயிலானவன், இவர்களை பார்த்தால் எனக்கு பயம்தான், சினிமாவில் நான் அவரை பாலோ...

நான் 11ம் வகுப்பில் பெயிலானவன், இவர்களை பார்த்தால் எனக்கு பயம்தான், சினிமாவில் நான் அவரை பாலோ அப் செய்வேன் – தன்னை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் பிரபுதேவா

- Advertisement -

நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான முன்னணி நடிகராக இருந்து வருகிறார். நடன இயக்குனர், நடிகர், திரைப்பட இயக்குனர் என்ற அடையாளங்களைக் கொண்டவராகவும் இருக்கிறார். பல முன்னணி ஹீரோக்களை ஆட்டுவித்து நடன இயக்குனராக அசத்தியவர் பிரபுதேவா. இப்போது தி கோட் படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபுதேவா நடித்திருந்தார்.

காதலன், ராசய்யா, உள்ளம் கொள்ளை போகுதே, வானத்தை போல, காதலா காதலா என பல படங்களில் நடித்து பிரபுதேவா அசத்தி இருக்கிறார். முன்னதாக ஜெண்டில்மேன், சூரியன், வால்டர் வெற்றிவேல், பிரதாப் போன்ற படங்களில் ஒரு பாடல் காட்சிக்கு மட்டுமே நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர் பிரபுதேவா. நல்ல நடிகராகவும் ரசிகர்கள் மனம் கவர்ந்திருக்கிறார். அதேபோல் போக்கிரி, வில்லு போன்ற படங்களை இயக்கிய டைரக்டராகவும் ஜெயித்திருக்கிறார் நடிகர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவான பேட்ட ராப் படம் வருகிற 27ம் தேதி வெளியாகிறது. ப்ளூ ஹில் பிலிம் நிறுவனம் தயாரிப்பாளர் ஜோபி வி ஷாம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் எஸ் ஜெ சினு இயக்கியுள்ளார். இதில் நடன புயல் பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

பேட்டராப் படத்தில் பிரபுதேவாவுடன் வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ்கான், ராஜீவ் பிள்ளை, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 27-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் பிரபுதேவா பேசுகையில், பேட்ட ராப் படத்தில் பணியாற்றும்போது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள், படப்பிடிப்பு தளம் என அனைத்தும் மனதுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை தந்தது.

நான் 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவன். அதனால் அதிகம் படித்தவர்களை கண்டால் எனக்குள் பயமாக இருக்கும். அதனால் பாடலாசிரியர்களை கண்டால் எனக்குள் ஒரு பிரமிப்பு ஏற்படும். நான் எப்போதும் எம்ஜிஆர் பார்முலாவை பின்பற்றுபவன். அதனால் பாடல்களில் சில சொற்களை தவிர்க்குமாறு வலியுறுத்துவேன், என்று இந்த விழாவில் நடிகர் பிரபுதேவா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்