- Advertisement -
Homeபொழுதுபோக்குமகனை கதாநாயகனாக மாற்றிய இயக்குனர் முத்தையா... பள்ளி சீருடையில் கையில் அரிவாளுடன் வந்திருக்கும் முதல் போஸ்டரால்...

மகனை கதாநாயகனாக மாற்றிய இயக்குனர் முத்தையா… பள்ளி சீருடையில் கையில் அரிவாளுடன் வந்திருக்கும் முதல் போஸ்டரால் கிளம்பியது சர்ச்சை… இதெல்லாம் தேவைதானா ப்ரோ…

- Advertisement -

தமிழ் சினிமாவில் கிராமத்துக் கதை களத்தில் தொடர்ந்து படங்களை இயக்கி வருபவர் முத்தையா. இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது குட்டிப்புலி. சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படம், வெற்றி பெற்றது. படம் சாதாரண கதை தான் என்றாலும், அதை என்ட்டர்டைன்மெண்டாக முத்தையா கொடுத்ததால், பாஸ் மார்க் வாங்கியது குட்டி புலி.

இதனைத் தொடர்ந்து அவர் கார்த்தியை வைத்து கொம்பன் திரைப்படத்தை இயக்கினார். முத்தையா இயக்கிய திரைப்படங்களிலேயே மிகப்பெரிய வெற்றியையும், நல்ல விமர்சனத்தையும் பெற்ற திரைப்படம் என்ன என்றால் அது கொம்பன் என்று அடித்துக் கூறலாம். மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையேயான உறவு, இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் மோதல் என அத்தனையும் கொம்பன் படத்தில் பக்காவாக இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த திரைப்படம் வெற்றி மேல் வெற்றி குவித்தது. இதனைத் தொடர்ந்து மருது, கொடிவீரன், தேவராட்டம், விருமன், காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் என ஒரே டோனிலேயே படத்தை எடுக்க ஆரம்பித்தார் முத்தையா. இது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது. எந்த ஒரு திரைப்படத்திற்கும் மாறுதல் இல்லாமல் கதைக்களமும் கிட்டத்தட்ட ஒரே வகையில் அமைந்தது.

முத்தையா படம் என்றாலே கதாநாயகன் படிப்பறிவு இல்லாமல், முட்டி தெரிய வேட்டி கட்டி இருப்பார், பெண்களை எப்போதும் குலசாமி ரேஞ்சுக்கு தூக்கி வைத்து வசனம் எழுதி இருப்பார், கிராமத்து கதைக்களத்தில் அதே தேய்ந்து போன காட்சி இருக்கும் என்று அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைதளத்திலும் முத்தையாவை பலர் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கூறியிருந்த முத்தையா, தனக்குத் தெரிந்தவர்களே தனது பாணியை மாற்றக் கூறியதாக பேசியிருந்தார். தனக்கும் ஒரே மாதிரியான கதைக்களத்திலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுவதாகவும் கூறியிருந்தார். இப்படியான சூழலில் முத்தையா அடுத்ததாக தனது மகன் விஜயை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

படத்திற்கு சுள்ளான் சேது எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதிலும் பள்ளி உடையணிந்த மாணவர், கையில் பட்டாகத்தியுடன் இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி இருக்கிறது. தற்போது இது குறித்த விமர்சனங்களும் எழுந்துள்ளன. பள்ளி மாணவர்களை இப்படி எல்லாம் காட்டலாமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது எப்படி இருக்க, நாளை சுள்ளான் சேது படத்திலிருந்து டீசர் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்