- Advertisement -
Homeபொழுதுபோக்குகொட்டுக்காளி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் முகம் சுளிக்கும்படி பேசிய இயக்குனர் மிஷ்கின், சூரியை அசிங்கப்படுத்தியதாக எழுந்த...

கொட்டுக்காளி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் முகம் சுளிக்கும்படி பேசிய இயக்குனர் மிஷ்கின், சூரியை அசிங்கப்படுத்தியதாக எழுந்த சர்ச்சை – இதெல்லாம் தேவையா ப்ரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து இன்று முன்னணி ஹீரோவாக மாறி வருகிறார் நடிகர் சூரி. துணை நடிகராக ஆரம்பத்தில் சில காட்சிகளில் நடித்த அவருக்கு, பரோட்டா காமெடி தந்த அடையாளம், முன்னணி காமெடி நடிகராக உருவாக்கியது. இயக்குனர் வெற்றிமாறன் முயற்சியால் விடுதலை படம் ஹீரோ அந்தஸ்தை தந்தது.

அதைத்தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் படத்தில் அவர் நடித்த சொக்கன் கேரக்டர், மீண்டும் அவருக்கு ஒரு சிறந்த நடிகன் என்ற பெயரை பெற்றுத் தந்திருக்கிறது. இப்போது 3வது படமாக சூரியின் நடிப்பில் கொட்டுக்காளி படம் வரும் 23ம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் அன்னாபென் சூரிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

கூழாங்கல் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படத்தில், பாண்டி என்ற கேரக்டரில் சூரி நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு இசையே இல்லை என்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு முக்கிய தகவலாக இருக்கிறது.

இந்நிலையில் கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் வந்தது. இதில் டைரக்டர் மிஷ்கின் கலந்துக்கொண்டார். எப்போதுமே மேடைகளில் பேசும்போது, வில்லங்கமாகவும் விவகாரமாகவும் பேசுவதை வழக்கப்படுத்தி வருகிறார் மிஷ்கின். அதே பாணியில் கொட்டுக்காளி டிரெய்லர் விழாவிலும் பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

- Advertisement -

இந்த விழாவில் டைரக்டர் மிஷ்கின் பேசுகையில், இந்த படம் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்றால், நான் ஆடையில்லாமல் நடிக்கவும் தயாராக இருக்கிறேன். நான் அப்படி ஆடினால் உங்களால் பார்க்க முடியுமா, ஆனால் இந்த படம் ரசிகர்களிடம் சென்று சேர வேண்டும் என்றால், இப்படி ஒரு பிரமோசன்.

கொட்டுக்காளி படத்தில் ஒரு காட்சியில் சூரி உச்சா போய்க்கொண்டு இருப்பார். அப்போது கேமரா மேன் அருகில் கேமராவை கொண்டு செல்வார். அந்த காட்சியில் சூரி நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். என்ன ஒரு நடிப்பு, என்ன ஒரு நம்பிக்கை அந்த கேமரா மேல் என்று மிஷ்கின் பேசியிருக்கிறார். இப்படி அநாகரிகமாக பேசுவது மிஷ்கினுக்கு அழகா, என்று நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்