- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க- ரஜினியும் சிவகார்த்திகேயனும் ஒன்றா? மிஷ்கினின் புது விளக்கம்

நான் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க- ரஜினியும் சிவகார்த்திகேயனும் ஒன்றா? மிஷ்கினின் புது விளக்கம்

- Advertisement -

சமீபத்தில் வெளியான “மாவீரன்” திரைப்படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்திருந்தார். ஒரு அரசியல்வாதிக்கு ஏற்றவாறு மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் மிஷ்கின். “மாவீரன்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் “சரிதா சிவகார்த்திகேயனை ரஜினி மாதிரி என்றார்கள். சிவா ரஜினிதான்” என்று கூறினார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் போல் ஆக்சன் செய்கிறார் என்று பலரும் கூறுவது உண்டு. மிஷ்கின் இவ்வாறு கூறியது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மிஷ்கின் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது தான் சிவகார்த்திகேயனை ரஜினிகாந்த் என்று கூறியது குறித்தான விளக்கத்தை அளித்துள்ளார்.

- Advertisement -

“ரஜினி என்று சொல்லும்போது நமக்கு Goodness என்ற வார்த்தைத்தான் ஞாபகம் வரும். அந்த Goodness சிவகார்த்திகேயனிடம் இருப்பதாக நான் கூறினேன். உடனே பலரும் சிவகார்த்திகேயனை ரஜினிகாந்த் என்று சொன்னதாக பேசத்தொடங்கிவிட்டனர்.

சிவகார்த்திகேயனை மிக உயரத்தில் வைத்து நான் பேசியிருக்கிறேன். ஆனால் நான் ரஜினியையும் சிவகார்த்திகேயனையும் கம்பேர் செய்யவில்லை. இன்னும் 50 வருடங்கள் ரஜினிகாந்த் மாதிரி சிவகார்த்திகேயன் பெரிய ஆளாக வரவேண்டும். Goodness என்ற குணம் சிவகார்த்திகேயனிடம் நிறைய இருக்கிறது என்றுதான் நான் அன்று சொல்ல வந்தேன். அதை பலரும் புரிந்துகொள்ள வேண்டும்.

- Advertisement -

உடனே சிவகார்த்திகேயனும் ரஜினிகாந்தும் ஒன்றா? என்று கேட்கின்றனர். எப்படி இருவரும் ஒன்றாக முடியும். ரஜினியின் வயது என்ன, அவருடைய அனுபவம் என்ன. இப்போதுதான் சிவகார்த்திகேயன் வளர்ந்து வருகிறார். அவரை பாராட்டும்போது மேடைகளில் தவணை முறையில் பாராட்டக்கூடாது. மொத்தமாக பாராட்டிவிட வேண்டும். ஒரு கடல் மொத்தமாக வந்து விழுவது போல் பாராட்ட வேண்டும். பாராட்டுவதை அப்படி பாராட்ட வேண்டும். ஆனால் விமர்சனங்களை கவனமாக பேச வேண்டும்” என்று மிஷ்கின் அப்பேட்டியில் கூறியுள்ளார்

- Advertisement -

சற்று முன்