- Advertisement -
Homeபொழுதுபோக்குமிஷ்கின் நடிக்க உள்ள அடுத்த படம் இந்த ஜாலி இயக்குனர் கூடவா? நினைச்சே பார்க்க முடியலையே

மிஷ்கின் நடிக்க உள்ள அடுத்த படம் இந்த ஜாலி இயக்குனர் கூடவா? நினைச்சே பார்க்க முடியலையே

- Advertisement -

மிஷ்கின் சமீப காலமாக பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். சமீபத்தில் “மாவீரன்” திரைப்படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய்யின் “லியோ” திரைப்படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார். இவ்வாறு டாப் கதாநாயகர்களின் திரைப்படங்களில் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மிஷ்கின் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக மிஷ்கினே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இது குறித்து மிஷ்கின் அப்பேட்டியில் பேசியதாவது,

“விக்னேஷ் சிவன் ஒரு நாள் என்னிடம் வந்து கதை சொன்னார். அந்த கதை அவுட் ஆஃப் தி வேர்ல்டு கதை. ஒரு அழகான கதையை வந்து கூறினார். நான் அவரது திரைப்படங்களை பார்த்ததில்லை. எப்போதாவதுதான் அவரை சந்திப்பேன். ரொம்ப ஸ்வீட்டானவர். இயக்குனர் ராம் அவரை குறித்து மிகவும் புகழுவார். அவர் படத்தில் நான் நடிக்க வேண்டும் என என்னிடம் கூறுவார்.

விக்னேஷ் சிவன் அந்த கதைக்காக அவ்வளவு வேலை செய்திருக்கிறார். ஒரு இடத்தில் கூட அந்த கதை நிற்கவே இல்லை. ஒரு மலையில் இருந்து அருவி கொட்டுவது போல எனக்கு கதை சொன்னார். அதன் பிறகுதான் மடோன்னே அஸ்வின் மாவீரன் பட கதையை கூறினார். அனேகமாக எனது அடுத்த படம் விக்னேஷ் சிவனுடைய படமாகத்தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன் “ஏகே 62” புராஜெக்ட்டில் இருந்து வெளிவந்த பிறகு பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்