- Advertisement -
Homeபொழுதுபோக்குமண்ணைத் தோண்டி அப்படி ஒரு காரியம் செய்த ராஷ்மிகா... வீடியோ வெளியிட்டு எதிர்பார்ப்பை கூட்டிய குபேரா...

மண்ணைத் தோண்டி அப்படி ஒரு காரியம் செய்த ராஷ்மிகா… வீடியோ வெளியிட்டு எதிர்பார்ப்பை கூட்டிய குபேரா படக்குழு… படத்துல பணம் விளையாடும் போல இருக்கே…

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்தி சினிமாவுக்கும் பரிச்சயமானவர் நடிகர் தனுஷ். பாலிவுட் மட்டுமல்ல, ஹாலிவுட் வரை அவர் சென்று விட்டார். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனது திறமையை வளர்த்து வரும் நாயகன், அடுத்த கட்டத்திற்கு சென்று வருகிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளியானது.

 

- Advertisement -

தெலுங்கு மொழியின் முதல் முறையாக நேரடி திரைப்படமாக தனுஷ் இதில் நடித்திருந்தார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக அந்த அளவு வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படமும் அனைத்து தரப்பினரை தவிர தவறியது.

 

- Advertisement -

இருப்பினும் திரையரங்குகளில் கேப்டன் மில்லர் வெற்றிகரமாகவே பயணித்தது. இதனைத் தொடர்ந்து தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் இந்த மாத இறுதியில் வெளியாகிறது. நடிகர் தனுஷே இந்த திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

 

கேங்ஸ்டர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தில் செல்வராகவன் எஸ் ஜே சூர்யா பிரகாஷ்ராஜ் என முன்னணி நடிகர்களும் இருப்பது அதற்கான ஆர்வத்தை தூண்டி உள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த எஸ் ஜே சூர்யா, ராயனில் துஷாரா விஜயனின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் தனுஷ் தனது அடுத்த திரைப்படமாக குபேரா படத்தில் நடித்து வருகிறார். இதுவும் நேரடி தெலுங்கு திரைப்படம் ஆக தான் எடுக்கப்பட்டு வருகிறது. தெலுங்கில் புகழ்பெற்ற இயக்குனர் சேகர் கமுலா இதனை எடுத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டரே பலரும் கவனிக்கும் வகையில் இருந்தது. அதில் அச்சு அசலாக பிச்சைக்காரன் கெட்டபில் தனுஷ் இருந்தார்.

 

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜூன் மற்றும் கதாநாயகியாக ராஷ்மிகா ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குபேரா படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ராஷ்மிகா வந்தனா மிகவும் பதட்டத்துடன் மண்ணை தோண்டுவது போலவும், அதிலிருந்து ஒரு பெட்டியில் கோடிக்கணக்கான பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்வது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதன் மூலம் குபேரா திரைப்படம் பணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுப்பது உறுதியாக இருக்கிறது. அது மட்டுமல்ல ராஷ்மிகாவுக்கும் இதில் மிக முக்கிய கதாபாத்திரம் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்