- Advertisement -
Homeபொழுதுபோக்கு4வது முறையாக சிறந்த நடிகர் தேசிய விருது வென்ற மலையாள நடிகர் மம்முட்டி - பிரம்மயுகம்...

4வது முறையாக சிறந்த நடிகர் தேசிய விருது வென்ற மலையாள நடிகர் மம்முட்டி – பிரம்மயுகம் படத்துக்கு 2 விருதுகள் அறிவிப்பு!

- Advertisement -

2024ம் ஆண்டுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இந்திய சினிமாவில் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி மொழி திரைப்படங்களுக்கான தேசிய விருதை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தலைவர் ஜெயராஜ் தலைமையிலான தேர்வுக்குழு நிர்வாகிகள் திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.

தமிழ் ஆவணப்படம் விருது – சிறந்த ஆவணப் படத்திற்கான பிரிவில் சிறந்த சவுண்ட் டிசைனர்க்கான விருது ப்ளூ என்ற தமிழ் ஆவண படத்திற்காக டிஎஸ் ஹரிஹரசுதன் தேர்வாகியுள்ளார். இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி அரவிந்த்சாமி இணைந்து நடித்த மெய்யழகன் படத்துக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது. சிறந்த சவுண்டு மிக்ஸிங்காக சுரன்ஜி தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

சிறந்த நடிகராக கேப்டன் மில்லர் படத்திற்காக நடிகர் தனுஷ் தேர்வாகி உள்ளார். சிறந்த தமிழ் படமாக தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் தேர்வாகியுள்ளது. சிறந்த சமூக மாற்றத்திற்கான படம் பிரிவில் கேப்டன் மில்லர் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த இயக்குனர் சிறந்த பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் இந்த படம் 3 விருதுகளை வென்றுள்ளது.

மலையாளத்தில் பிரம்மயுகம் படத்துக்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கிய பிரம்மயுகம் படத்துக்கு சிறந்த நடிகர் தேசிய விருது நடிகர் மம்முட்டிக்கு அறிவிக்கபட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் 4வது முறையாக நடிகர் மம்முட்டி தேசிய விருது பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் பிரம்மயுகம் படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளராக ஷகனாத் ஜீலால் தேசிய விருது பெறுகிறார். ஏற்கனவே 3 முறை இந்திய அரசின் தேசிய விருதுகளை வென்ற நடிகர் மம்முட்டி பிரம்மயுகம் படத்துக்காக 4வது முறையாக சிறந்த நடிகர் தேசிய விருது பெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மிரட்டலான ஒரு திரில்லர் கேரக்டரில் நடிகர் மம்முட்டி நடித்திருந்தார்.

தேசிய விருதுகள் பட்டியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில படங்களுக்கும் சில படைப்பாளிகளுக்கும் இந்த முறை ஏமாற்றமே. அவர்களும் அவர்களது படைப்புகளும் விருதுகளுக்கு தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சாய்பல்லவி தேசிய விருது பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. ஆனால் அந்த படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்