- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே மீண்டும் மீண்டும் சர்ச்சைகள், இப்படி ஒரு விவகாரம்...

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே மீண்டும் மீண்டும் சர்ச்சைகள், இப்படி ஒரு விவகாரம் இதுக்கு பின்னாடி இருக்குதா? – நல்லா கிளப்பி விடுறாங்கப்பா!

- Advertisement -

கடந்த சில தினங்களாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் குறித்த விவகாரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிந்துவிட இருப்பதாகவும், விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ வெளியாகும் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு முக்கிய காரணம், நயன்தாரா தனது கணவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியேற்றியதுதான். மேலும், அவர் சில சர்ச்சைக்குரிய வாசகங்களை பதிவிட்டும் இருந்தார். சமீபத்தில் கூட, உம் நான் தொலைத்துவிட்டேன் என்றும் கூறியிருந்தார். இவைதான் இந்த பரபரப்புக்கு காரணமாக மாறியது.

- Advertisement -

நயன்தாரா ஏற்கனவே பிரபுதேவா, சிலம்பரசன் ஆகியோரிடம் சில ஆண்டுகள் நெருக்கமாக வாழ்ந்த நிலையில், அவர்களை திருமணம் செய்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதலில் சிலம்பரசனுடன் பழகிய நிலையில், அவரது காதல் பிரேக்கப் ஆனது. அடுத்து பிரபுதேவாவுடன் பழகிய நிலையில் அவர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. வேண்டுமானால் இப்படியே இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

அதன்பிறகுதான் சிலம்பரசன், பிரபுதேவாவை உதறித் தள்ளிய நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலித்து, 7 ஆண்டுகள் இருவரும் சின்சியராக காதலித்த நிலையில் கடந்தாண்டு திருமணம் செய்துக்கொண்டனர். வாடகைத்தாய் மூலம், இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகினர். இப்போது நயன்தாரா, மண்ணாங்கட்டி படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். விக்னேஷ் சிவன் எல்ஐசி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

இந்த சூழலில், இப்படி இருவருக்கும் பிரச்னை இருப்பதாக, சமூக வலைதள பக்கத்தில் நயன்தாரா பதிவுகளை வெளியிடுவது, வேண்டும் என்றே செய்கிற ஒரு யுக்தி என்பது தெரிய வந்துள்ளது. தங்களை பற்றி அடிக்கடி சமூக வலைதளங்களில் ஏதேனும் தகவல்கள் வந்துக்கொண்டே இருப்பதுதான், தங்களது இமேஜ் குறையாமல் மக்கள் மத்தியில், மனங்களில் நீடித்திருக்கும் என்பதே, வேண்டும் என்றே இந்த செயல்களை செய்கின்றனர்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து மொத்தம் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 12 சொத்துகளை வாங்கியுள்ளனர். அந்த சொத்துகளை அவரின்றி இவரோ, இவரின்றி அவரோ விற்கவோ, மாற்றங்கள் செய்யவோ முடியாது. அந்தளவுக்கு மனரீதியாக ஒற்றுமையாக இருக்கும் அவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. விவகாரத்துக்கும் வாய்ப்பே இல்லை. வேண்டுமென்றே தங்களை பற்றி வதந்திகளை, புரளிகளை அவர்களே கிளப்பி விடுகின்றனர் என்ற தகவலும் இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்