- Advertisement -
Homeபொழுதுபோக்குராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து திடீரென விலகிய லேடி சூப்பர் ஸ்டார் - ஆளை விடுங்கடா...

ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து திடீரென விலகிய லேடி சூப்பர் ஸ்டார் – ஆளை விடுங்கடா பா என தெறித்து ஓடக் காரணம் என்னவென்று தெரியுமா

- Advertisement -

தமிழ் சினிமாவில், முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் நாளுக்கு நாள் தனி கெத்து காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் நயன்தாரா, திரிஷா ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர்களுக்காக கதைகள் உருவாக்கப்பட்டு, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்கின்றனர். அவர்களின் கால்ஷீட் என்பது, பெரிய ஹீரோக்களுக்கு இணையாக பேசப்படும் ஒரு நிலை காணப்படுகிறது.

திருமணத்துக்கு பிறகும் நயன்தாராவின் பழைய மார்க்கெட் குறையவில்லை. அதே போல் சமந்தாவும் தனி இடத்தில், பெரிய ஹீரோயினாக பேசப்படுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படங்களும், அவருக்கான படங்களாக உருவாக்கப்படுகின்றன. பொன்னியின் செல்வன் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு, பழைய இடத்துக்கே திரிஷா வந்துவிட்டார் என்கின்றனர். அவரது தி ரோடு படமும் நல்ல படமாக இருப்பதாக விமர்சனம் வந்துக்கொண்டு இருக்கிறது.

- Advertisement -

திருமணத்துக்கு பிறகு நயன்தாரா நடித்த சில படங்கள் பெரிய படங்கள் பேசப்படவில்லை. ஜெயம் ரவியுடன் நடித்த இறைவன் படமும் ஏமாற்றி விட்டது. ஆனால், ஷாருக்கான் உடன் நடித்த ஜவான் படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தின் வசூல் 1200 என்ற நிலையில், அடுத்தடுத்து பாலிவுட்டில் படங்களை எதிர்பார்த்த நயன்தாராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில், ரத்னகுமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆடை, குலுகுலு, மேயாத மான் என மூன்று மொக்கை படங்களை எடுத்தவர் என்று பெயர், இயக்குநர் ரத்னகுமாருக்கு கோலிவுட்டில் உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதிக்க காரணம், ராகவா லாரன்ஸ் தான்,

- Advertisement -

மேலும், இந்த படத்தில் டைரக்‌ஷன் பொறுப்பு மட்டுமே, மற்றபடி படத்தின் தயாரிப்பு மற்றும் கதை, திரைக்கதை வசனம் எல்லாமே லோகேஷ் கனகராஜ் எனவும் துவக்கத்தில் கூறப்பட்டுள்ளது. ரத்னகுமார், அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்ற நிலையில், இந்த படத்தில் நயன்தாரா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இப்போது இந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து நயன்தாரா விலகி விட்டதாக தகவல் வந்துள்ளது. ஜவான் போன்ற பிளாக்பஸ்டர் மூவியில் நடித்துவிட்டு, தொடர்ந்து பிளாப் படங்களை தந்த ரத்னகுமார் படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாக தெரிகிறது. ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்தாலும், அவருக்கு ஜோடியாகவும் அவர் நடிக்காத நிலையில், நயன்தாரா இறைவன் படத்தை போல, இதிலும் டம்மி கேரக்டராக இருந்துவிடலாம் என்ற அச்சத்தில், திடீரென நயன்தாரா விலகி விட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்