கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் இறைவன், ஜவான் மற்றும் அன்னபூரணி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இறைவன் திரைப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்தார். அகமது இயக்கியிருந்த இந்த திரைப்படம், மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. படத்தில் நயன்தாராவிற்கும் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த ஒரு காட்சிகள் இல்லை.
அதேசமயம் ஜவான் திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக பாலிவுட்டில் கதாநாயகியாக நயன்தாரா அறிமுகம் ஆகி இருந்தார். ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த சூழலில், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
ஆனால் தமிழில் என்னவோ ஜவான் திரைப்படம் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் நயன்தாராவை விட தீபிகா படுகோனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் நயன்தாரா கடும் அப்செட்டில் இருந்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம், நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியாகிறது.
திரையரங்குகளில் படம் வந்த இடமே தெரியாமல் ஓடிப் போன நிலையில், ஓடிடி யில் வெளியானதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிராமண சமூகத்தை இந்த திரைப்படத்தில் இழிவு படுத்தி இருப்பதாக மகாராஷ்டிராவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனமும், அந்தக் காட்சி நீக்கப்படும் வரை ஓடிடி இல் இருந்து படத்தை தூக்குவதாக அறிவித்தது.
நயன்தாராவும் அன்னபூரணி பட சம்பவத்திற்கு மன்னிப்பு கூறினார். தனது கடிதத்தில் அவர் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இப்படி கடந்த வருடமும் அவர் சர்ச்சையிலேயே சுற்றி இருந்த சூழலில், தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் மண்ணாங்கட்டி என்னும் படத்தில் அவரை அறிந்து வருகிறார். 1960 காலகட்டங்களை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.
இதற்குப் பிறகு, தனது கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ளாராம். தற்போது துரை செந்தில்குமார் சூரி நடிப்பில் கருடன் படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக லெஜன்ட் சரவணன் வைத்து அவர் படத்தை இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து தான் நயன்தாராவுடன் அவர் இணைந்து பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்பட, யானைக்கும் இளம்பெண்ணுக்கும் இடையேயான அன்பை வெளிகாட்டும் வகையில் எடுக்கப்பட இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





