- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை குப்பையில் போட்டோம், இப்போது நானும் என் கணவரும் நடுத்தெருவில் நிற்கிறோம் - வேதனையை பகிர்ந்த...

அதை குப்பையில் போட்டோம், இப்போது நானும் என் கணவரும் நடுத்தெருவில் நிற்கிறோம் – வேதனையை பகிர்ந்த நடிகை நீலிமா ராணி!

- Advertisement -

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு சென்று ஜெயித்தவர்களை விட தோற்றுப் போனவர்களே பலமடங்கு அதிகம். சினிமாவில் நடிக்க ஆசைப்படுபவர்கள் மட்டுமின்றி, சினிமா தயாரிக்க ஆசைப்பட்டு பலரும் தங்களது பல கோடி பணத்தை, பல கோடி ரூபாய் சொத்துகளை இழந்து நிர்கதியாக நின்றிருக்கின்றனர்.

சினிமா துறை சார்ந்தவர்களே ஒரு கட்டத்தில் சொந்த படம் தயாரிக்க ஆசைப்பட்டு கையை சுட்டுக்கொண்டவர்களும் உண்டு. நடிகர் கமல்ஹாசன் பல வெற்றிப் படங்களில் நடித்து சம்பாதித்ததை எல்லாம் தனது படங்களை தயாரித்து இழந்தது அதைவிட அதிகம் என்பதுதான் கசப்பான உண்மை.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்த பல ஆண்டுகளில் தோல்வி படங்களை பெரிய பட்ஜெட்டில் தயாரித்து ஒரு கட்டத்தில் நிறுவனத்தையே மூடிவிட்டு சென்றிருக்கின்றன. சமீபகால உதாரணமாக லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்த பல படங்கள் பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியதால், அந்த நிறுவனமும் விரைவில் மூடுவிழா காண உள்ளது.

சீரியல் நடிகையாக தமிழக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நீலிமா ராணி. பல டிவி சேனல்களில் ஒளிபரப்பான பல முக்கிய தொடர்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். சீரியலில் மட்டுமின்றி நீலிமா ராணி பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக மட்டுமின்றி இப்போதும் பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

கோலங்கள் மெட்டி ஒலி தென்றல் இதயம் பவானி செல்லமே தற்காப்பு கலை தீராதா உள்ளிட்ட பல சீரியல்களில் நீலிமா ராணி முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். அதே போல் தேவர்மகன் பாண்டவர் பூமி விரும்புகிறேன் உள்ளிட்ட படங்களில் சிறுமியாக அவர் நடித்திருக்கிறார். திமிரு பையா மொழி பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை நீலிமா ராணி கூறுகையில், நானும் என் கணவரும் சேர்ந்து ரூ. 4கோடி பட்ஜெட்டில் சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்தோம். அதற்காக வெளியில் வட்டிக்கு கடன் வாங்கி அந்த படத்தை தயாரித்தோம். ஆனால் அந்த படம் நாங்கள் நினைத்தது போல் சரியாக வரவில்லை. கடைசியில் அந்த படத்தை குப்பையில் தான் போட்டோம். அந்த படத்துக்காக கடன் வாங்கி இப்போது நடுத்தெருவில் நிற்கிறோம், என்று நடிகை நீலிமா ராணி வேதனையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்