- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை உணர்த்துவதற்காகத்தான் ரஜினிகாந்த்தை சுருட்டு பிடிக்க வைத்தேன்.. நெல்சன் ஓபன் டாக்

அதை உணர்த்துவதற்காகத்தான் ரஜினிகாந்த்தை சுருட்டு பிடிக்க வைத்தேன்.. நெல்சன் ஓபன் டாக்

- Advertisement -

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். அவர் இயக்கிய முதல் இரண்டு படங்களான கோலமாவு கோகிலா டாக்டர் ஆகியவைகள் அவருக்கு நல்ல பெயரை எடுத்துக்கொடுத்தன. ஆனால் அந்தப் பெயர் பீஸ்ட் படத்தில் ஒட்டுமொத்தமாக காலியானது. அதனை எப்படியாவது மீட்டெடுத்துவிட வேண்டும் என்ற முனைப்போடு ஜெயிலரில் பணியாற்றினார் அவர்.

படமானது கடந்த பத்தாம் தேதி உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் 900 ஸ்க்ரீன்களிலும் உலகம் முழுவதும் நான்காயிரம் ஸ்கிரீன்களிலும் திரையிடப்பட்டது. இதனால் நிச்சயம் பெரும் வசூலை குவிக்கும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

- Advertisement -

படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நெல்சன் திலீப்குமார் தன்னுடைய ஸ்டைலிலும் ரஜினிக்கான மாஸ் குறைந்து விடாதபடியும் காட்சிப்படுத்தி இருந்தார். அதேபோல் பான் இந்தியா அளவில் பெரிய ஸ்டார்களையும் களம் இறக்கி இருந்ததால் அவர்களையும் சரியாக பயன்படுத்தி இருந்தார். படத்தின் இடைவேளை காட்சி உள்ளிட்டவைகள் மிக அருமையாக இருந்ததாகவும் பல இடங்களில் பழைய ரஜினியை நெல்சன் திலீப் குமார் ஞாபகப்படுத்தி விட்டார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முதல் நாளில் படமானது இந்தியாவில் மட்டும் 49 கோடி ரூபாயை வசூலித்ததாக தெரிகிறது. மூன்று நாட்கள் முடிவடைந்த சூழலில் படத்தின் வசூல் நூறு கோடி ரூபாயை கடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால் இன்னும் சில நாட்களில் பல படங்களின் ரெக்கார்டுகளை ஜெயிலர் உடைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது

- Advertisement -

படத்துக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் கிடைத்தாலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ரஜினி சுருட்டு பிடிப்பதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மது சிகரெட் போன்றவை தீய பழக்கம் என்று மேடையில் பேசிவிட்டு படத்தில் எதற்காக ரஜினிகாந்த் அதனை பயன்படுத்த வேண்டும் எனவும் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் எடுத்த பேட்டியில் நெல்சன் திலிப் குமார் கூறுகையில், “ஜெயிலர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சுருட்டு பிடிக்க வெனெடும் என நான் ரஜினி சாரிடம் சொன்ன பிறகு அவர் முதலில் யோசித்தார்.

ஆனால் கதைக்கும், அந்தக் காட்சிக்கும் அது தேவை என்பதால் அப்படி நடிக்க ஒத்துக்கொண்டார். மோகன்லால், சிவராஜ்குமார், ரஜினிகாந்த் ஒரே டீமை சேர்ந்தவர்கள் என்பதை உணர்த்துவதற்காகத்தான் அவர்கள் மூன்று பேரும் சுருட்டு பிடிக்கும் காட்சியை வைத்தேன். அதனை அவர்களும் உணர்ந்துகொண்டார்கள்” என்றார்.

- Advertisement -

சற்று முன்