- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி பட விழாவில் ரஜினியை புகழ்ந்து தள்ளிய நடிகர் சத்யராஜ்… பழைய வீடியோவை போட்டு புரட்சித்...

கூலி பட விழாவில் ரஜினியை புகழ்ந்து தள்ளிய நடிகர் சத்யராஜ்… பழைய வீடியோவை போட்டு புரட்சித் தமிழனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் அறிமுகமானவர் நடிகர் சத்யராஜ். சட்டம் என் கையில் என்ற கமல் படம்தான் சத்யராஜ் நடித்த முதல் படம். அப்போது தமிழில் முன்னணி ஹீரோக்களாக இருந்த ரஜினிகாந்த் கமல்ஹாசன் படங்களில்தான் சத்யராஜ் வில்லனாக நடித்தார். அந்த வகையில் ரஜினியுடன் 7 படங்களில் சத்யராஜ் வில்லனாக நடித்திருக்கிறார்.

கடந்த 1987ம் ஆண்டில் மிஸ்டர் பாரத் என்ற படத்தில் ரஜினியுடன் சத்யராஜ் நடித்திருந்தார். அதன்பிறகு அவர் 37 ஆண்டுகளாக நடிக்கவில்லை. மிஸ்டர் பாரத் படத்தில் நடித்த போது ரஜினிக்கும் சத்யராஜூக்கும் சில கருத்து வேறுபாடு மற்றும் மனக்கசப்பு ஏற்பட்டதால் இருவரும் பிறகு சேர்ந்து படங்களில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் 37 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரஜினியுடன் சத்யராஜ் கூலி படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். அதுவும் ரஜினிக்கு நண்பராக நடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த கூலி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று, ரஜினியை புகழ்ந்தும் பேசியிருக்கிறார். ஸ்டைல் என்றால் ரஜினிதான். அவர் சூப்பர் ஆக்டர் என்பதால்தான் 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்றும் பாராட்டி இருந்தார்.

ஆனால் இதே நடிகர் சத்யராஜ், கடந்த 2000ம் ஆண்டுகளில் நடந்த கர்நாடகா காவிரி நீர் பிரச்னையின் போது நடிகர்கள் பங்கேற்ற ஒரு போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து தாறுமாறாக விமர்சித்து பேசியிருந்தார். யார் பேரை நான் சொன்னால் நீங்க கைதட்டுவீங்க என்று எனக்கு தெரியும். ஆனால் அந்த பேரை சொல்லி கைதட்டல் வாங்குவதற்கு நான் நாக்கை பிடுங்கிட்டு சாவேன் என்று சத்யராஜ் பேசியிருந்தார்.

அவர் அப்படி அந்த மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்தை தான் என்று அங்கிருந்த ரசிகர்களுக்கும் தெரியும். மேடையில் இருந்த மற்ற நடிகர்களுக்கும் தெரியும். ஆனால் சத்யராஜ் இப்படி தன்னைப் பற்றி பேசிய பிறகும் நடிகர் ரஜினிகாந்த் எந்தவித மாற்று கருத்தோ எதிர்ப்போ தெரிவிக்காமல் அமைதியாக தான் அந்த மேடையில் அமர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது நெட்டிசன்கள், சத்யராஜ் அன்று ரஜினியை விமர்சித்து பேசிய அந்த வீடியோவையும், சமீபத்தில் கூலி பட விழாவில் சத்யராஜ் ரஜினியை புகழ்ந்து பேசிய வீடியோவையும் இணையத்தில் பதிவிட்டு அது வேற வாய், இது நாற வாய் என்று கமெண்ட் செய்து நடிகர் சத்யராஜை வறுத்தெடுத்து வருகின்றனர். தன்னை அன்று விமர்சித்த நடிகர் சத்யராஜை இன்று தன்னை புகழ வைத்து விட்டார். அவர்தான் சூப்பர் ஸ்டார் என்றும் ரஜினி ரசிகர்கள் பெருமிதமாக கூறி வருகின்றனர்.

சற்று முன்