- Advertisement -
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு கேக் வழங்கப்பட்டது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மிகப்பெரிய சாதனை செய்து விட்டதாக புளகாங்கிதம் அடைந்துள்ளார். அமைச்சரின் இவ்வளவு கொண்டாட்டத்திற்கும் பெருமைக்கும் காரணம் என்ன என்று கேட்டால் அனைத்து பள்ளிகளுக்கும் 8 ரூபாய் மதிப்புள்ள கேக் பாக்கெட்டை வழங்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதை சரிசெய்ய வழியில்லை. கேக் கொடுத்தால் இதெல்லாம் ஒரு பெருமையா? என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.





