நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான படம் குபேரா. வருகிற 20ம் தேதி குபேரா படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை சேகர் கம்முலா டைரக்ட் செய்திருக்கிறார். இதில் தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். முக்கியமான ஒரு கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நடித்துள்ளார்.
குபேரா படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் தயாரிப்பு நிறுவனம் அமிகோஸ் கிரியேசன்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்திருக்கின்றன. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
கடந்தாண்டில் தனுஷ் நடித்து இயக்கிய ராயன் படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. 100 கோடி ரூபாய்க்கு வசூலித்து பிளாக் பஸ்டர் மூவியாக சாதனை படைத்தது. ஆனால் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் பிளாப் ஆன நிலையில், குபேரா படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறி உள்ளது.
இந்த சூழலில் குபேரா படத்தின் கதை இதுதான் என்று இணையத்தில் அந்த படம் குறித்த தகவல் லீக் ஆகியுள்ளது. அதன்படி குபேரா படத்தில் ஊழல்வாதிகள் செல்வாக்கு மிக்க தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளிடம் பணி செய்யும் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் கேரக்டரில் நடிகர் நாகார்ஜுனா நடித்திருக்கிறார். அவர் தனது கணக்கில் உள்ள அனைவரின் கருப்பு பணத்தையும் திரும்ப பெற அவர் பெரிய ஒரு திட்டத்தை வகுக்கிறார்.
இந்த படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரர் கேரக்டரில் நடித்திருக்கிறார். அதனால் தனுஷ் உள்ளிட்ட சில ரோட்டோர பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுக்கும் நாகர்ஜூனா அவர்களை போலி அடையாளங்களுடன் தொழிலதிபர்களாக மாற்றி அவர்களை சுவிஸ் கணக்குகளை திறக்க வைக்கிறார். இருப்பினும் தனுஷ் குருவை மிஞ்சும் வகையில் சில பிளான்களை செய்கிறார். இதனால் கதையில் பெரிய திருப்பம் ஏற்படுகிறது.
நாகார்ஜூனாவுக்கு தெரியாத பல விஷயங்களை இதில் திட்டமிட்டு கருப்பு பணத்தின் மொத்த பங்கையும் தனது லாபத்திற்காக தனுஷ் கையாளும் அளவுக்கு இதில் செயல்படுகிறார். அப்போது தனுஷூக்கும் நாகார்ஜூனாவுக்கும் இடையே நடக்கும் பெரிய போராட்டமே குபேரா படத்தின் கதைக்களம் என்றும், இதில் யார் கடைசியில் வெற்றி பெறுகிறார் என்பதே குபேரா படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. நிச்சயம் இந்த படம் லக்கி பாஸ்கர் போல, ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற அதிக வாய்ப்புள்ளது.





