இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி, உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். படத்தின் டைட்டிலை போலவே, படம் பார்த்த ரசிகர்கள் அவருக்கு உள்ளத்தை தந்துவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் காதலிக்க நேரமில்லை படம் போல, முழுநீள காமெடி படமாக அந்த படத்தை, தனது முதல் படத்தை சுந்தர் சி தந்திருந்தார்.
கார்த்திக், ரம்பா ஜோடியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி லீடிங் ரோலில் நடித்திருந்தார். மணிவண்ணன், செந்தில், ஜோதி மீனா, ஜெய் கணேஷ், அல்வா வாசு, பாண்டு, கசன்கான் என முக்கிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியைடைந்ததை தொடர்ந்து முறைமாமன், மேட்டுக்குடி, அரண்மனை, அருணாசலம், அன்பே சிவம் போன்ற படங்களை டைரக்ட் செய்து முன்னணி இயக்குநரானார் சுந்தர் சி.
முறைமாமன் படத்தில் நடித்த போது, சுந்தர் சிக்கும், குஷ்புவுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துக்கொண்டனர். அவர்களுக்கு 2 பெண்கள் உள்ளனர். இப்போது குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருக்கிறார். அதனால் குஷ்புவின் கணவர் என்ற அடையாளமும் சுந்தர் சிக்கு பெரிய அடையாளத்தை தந்தது. ஒரு கட்டத்தில், இயக்குனராக இருந்து சினிமாவில் நடிக்கவும் ஆரம்பித்து விட்டார் சுந்தர் சி.
இந்நிலையில் அரண்மனை, அரண்மனை 2 அரண்மனை 3 படங்களை இயக்கிய சுந்தர் சி, அரண்மனை 4 படத்தை இயக்கி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படம் இதுவரை ரிலீஸ் செய்யப்படவில்லை.இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயின்ட் மூவிஸ் வெளியிட இருந்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் பாஜக சேர்ந்தவர் என்பதால் ரிலீஸ் செய்ய முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து, இந்தி படம் இயக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர் சி. தமிழில் இருந்து அட்லி பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கிய, பெரிய ஸ்டார் டைரக்டர் என புகழ் பெற்று விட்டார். இப்போது அந்த வரிசையில் அடுத்து நடிகர் மற்றும் இயக்குநர் சுந்தர் சி, பாலிவுட் நடிகரை ஹீரோவாக போட்டு படம் டைரக்ட் செய்கிறார்.
நடிகர் அக்ஷய்குமார், சுந்தர் சியை அழைத்து நேரில் கதை கேட்டுள்ளார். கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போன நிலையில், மிக விரைவில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தை சுந்தர் சி டைரக்ட் செய்ய இருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் ஏற்கனவே 2. ஓ என்ற படத்தில் பக்ஷி ராஜா கேரக்டரில் அக்ஷய்குமார் சூப்பரான நடிப்பை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் தமிழ் பட இயக்குநர் படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார்.





