- Advertisement -
Homeபொழுதுபோக்குதக்லைப் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தை இயக்க தயாரான இயக்குனர் மணிரத்னம் - ஆனா இந்த...

தக்லைப் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தை இயக்க தயாரான இயக்குனர் மணிரத்னம் – ஆனா இந்த முறை ஆட்டம் பழசு… ஆட்கள்தான் புதுசு!

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஸ்பெஷல் கவனம் வந்துவிடுகிறது. அவரது படங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து விடுகிறது. தளபதி நாயகன் பம்பாய் ரோஜா உயிரே இருவர் கீதாஞ்சலி இராவணன் பொன்னியின் செல்வன் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இந்திய அளவில் அதிக வரவேற்பை பெற்ற இயக்குனர்.

பொன்னியின் செல்வன் 2 பாகங்களை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் சிம்பு திரிஷா அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய தக்லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. நாயகன் படத்துக்கு பிறகு 32 ஆண்டுகள் கழித்து கமலும் மணிரத்னமும் இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக படமாக்கி இருந்தார் மணிரத்னம். ஆனால் முதல் பாகம் கிடைத்த வரவேற்பு 2ம் பாகத்துக்கு கிடைக்கவில்லை. அதற்கு காரணம், கதையில் வரும் முடிவை சினிமாவுக்காக மாற்றி வேறுவிதமாக கொண்டு வந்திருந்தார் மணிரத்னம். அதை ரசிகர்கள் ஏற்கவில்லை.

தக்லைப் படத்துக்கு பிறகு இனி அடுத்ததாக ரஜினி படத்தை இயக்குவார், கமலுடன் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணுவார் என்று பல தகவல்கள் இணையத்தில் உலா வரும் நிலையில், மணிரத்னம் அடுத்து இயக்கப் போகும் படம் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.

கடந்த 1989ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் இதயத்தை திருடாதே. நாகர்ஜூனா, கிரிஷா நடிப்பில் காதல் கதைக்களத்தில் உருவான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அந்த காலகட்டத்தில் அன்றைய தலைமுறைக்கு காதலை அவர்கள் போக்கில் சொன்ன படம். அதன்பிறகு உயிரே ஓ காதல் கண்மணி போன்ற காதல் படங்களை தந்து அசத்தியவர் மணிரத்னம்.

இப்போது அவர் அடுத்ததாக கையில் எடுக்கப் போவதும் ஒரு காதல் கதை தான். புதிய அறிமுக நடிகர்களை வைத்து, குறைந்த பட்ஜெட்டில் ஒரு காதல் கதையை தான் படமாக எடுக்க மணிரத்னம் முடிவு செய்திருக்கிறார். அதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு இப்போது வேகமாக நடந்து வருகிறது. இப்போதும் காதல் கதையை இயக்குவதில் மணிரத்னம் தீவிர ஆர்வம் காட்டுவது ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

சற்று முன்