- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதுல பாஸ்ட்புட் கடை, இதுல இட்லி கடை - ராயன் படத்தின் தொடர்ச்சிதான் தனுஷ் இயக்கி...

அதுல பாஸ்ட்புட் கடை, இதுல இட்லி கடை – ராயன் படத்தின் தொடர்ச்சிதான் தனுஷ் இயக்கி நடிக்கும் 52வது படமா? அப்படி என்றால் ராயன் 2ம் பாகம்? – ரசிகர்கள் கேள்விக்கு பதில் இதுதான்!

- Advertisement -

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான படம் ராயன். இது அவரது நடிப்பில் 50வது படமாகவும் இருந்தது. ராயன் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை, ஆதரவை பெற்ற இந்த படம் ரூ. 155 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து. ராயன் பெரிய வெற்றியை பெற்றது.

ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இப்போது தனது 52வது படத்தை இயக்கி, கதாநாயகனாக அவரே நடிக்கிறார். ப பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கும் 4வது படம் இது. ஆகாஷ் என்ற தயாரிப்பாளர் தயாரிக்கும் இந்த படத்துக்கு இட்லி கடை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தேனி மாவட்டத்தில், இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. முதல் ஷெட்யூட் படப்பிடிப்பில் பாடல் காட்சி இப்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் பெயர் இட்லி கடை என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களுக்கு ராயன் படத்தின் 2ம் பாகமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் ராயன் படத்தில் பாஸ்புட் கடை நடத்துபவராக தனுஷ் நடித்திருந்தார். படத்தின் இறுதிக் காட்சியில் அவர் தனது தங்கையுடன் சென்னையை விட்டு வெளியூர் செல்வது போல் காட்டப்பட்டு இருந்தது. அதனால் அவர் ராயன் 2ம் பாகத்தில் தேனி மாவட்டத்தில் இட்லி கடை நடத்துவது போல் கதையின் தொடர்ச்சி இருக்கும் என்பதால், இதுதான் ராயன் படத்தின் 2ம் பாகம் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் உண்மையில் ராயன் படத்துக்கும், தனுஷ் இப்போது இயக்கும் 52வது படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் தனுஷின் 52வது படத்தில் நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இந்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார். அதனால் ராயன் படத்தில் நடித்த நடிகர்கள் யாரும் இந்த படத்தில் நடிக்காத நிலையில், கண்டிப்பாக இந்த படம் ராயன் படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்று உறுதியாக கூறப்படுகிறது.

மேலும் ராயன் 2 படம் குறித்து நடிகர் தனுஷ் ஏற்கனவே கதை யோசித்து வைத்திருப்பதாகவும், சில ஆண்டுகள் கழித்துதான் ராயன் படத்தை அவர் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. இப்போது அவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட்மெண்ட்ஸ் இருப்பதால், சில ஆண்டுகளுக்கு பிறகு ராயன் 2 படம் பற்றியே யோசிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தனுஷ் இயக்கும் 52வது படம் நிச்சயமாக ராயன் படத்தின் 2ம் பாகம் இல்லை என்று உறுதியாகத் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்