- Advertisement -
Homeபொழுதுபோக்குமாஸ் ஹிட் ஆன அந்த 2 படங்களில் நடித்திருந்தால் என் லெவலே வேற - ஆனால்...

மாஸ் ஹிட் ஆன அந்த 2 படங்களில் நடித்திருந்தால் என் லெவலே வேற – ஆனால் வந்த வாய்ப்பை மறுத்து விட்டேன் – இப்போது வருத்தப்பட்ட நடிகை நிரோஷா

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1990களில் முக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை நிரோஷா. இப்போது ரிலீஸாகி திரையில் ஓடிக்கொண்டு இருக்கிற லால் சலாம் படத்தில், ரஜினிக்கு மனைவியாக நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் படத்தில், நடிகை நிரோஷா நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நிரோஷா, நடிகர் ராம்கியின் மனைவி. நடிகை ராதிகாவின் சகோதரி. எம்ஆர் ராதாவின் மகள் என்பதும் முக்கியமான அவரது அடையாளங்கள். கடந்த 1990களில் பல வெற்றிப்படங்களில் நிரோஷா நடித்திருக்கிறார். குறிப்பாக இணைந்த கைகள், செந்தூரப்பூவே, பாண்டி நாட்டுத்தங்கம், அக்னி நட்சத்திரம், சூரசம்ஹாரம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர்.

- Advertisement -

ராம்கியுடன் செந்தூரப்பூவே படத்தில் நிரோஷா நடித்த காலகட்டத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு காதல் திருமணம் செய்துக்கொண்டனர். நல்ல காதலுக்கு உதாரணமாக தமிழ் சினிமாவில் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் சில ஜோடிகளில் ராம்கி – நிரோஷாவும் குறிப்பிடத்தக்கவர். திருமணத்துக்கு பிறகு அம்மா, அக்கா, அண்ணி கேரக்டர்களில் நிரோஷா நடித்து வருகிறார்.

ப்ரியமான தோழி, மலைக்கோட்டை, சிலம்பாட்டம், ராஜவம்சம், 100 உள்ளிட்ட படங்களில் நிரோஷா நடித்திருக்கிறார். இப்போது நடிகர் ரஜினிகாந்த் மனைவியாக நிரோஷா மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார். அதுமட்டுமின்றி டிவி சீரியலில் காமெடி தொடரான சின்னபாப்பா, பெரிய பாப்பா தொடரில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நிரோஷா.

- Advertisement -

கடந்த 1990களில் பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நடிகை நிரோஷாவுக்கு சில முக்கிய படங்களில், அதுவும் பின்னாளில் மிகப்பெரிய அளவில் மாஸ் ஹிட்டான படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால், அந்த சமயத்தில் வேறு படங்களில் நடிக்க கமிட் ஆகி இருந்ததால், இந்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை அவர் இழந்திருக்கிறார்.

பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி கேரக்டரில் முதலில் நடிக்க பாரதிராஜா அணுகியது நிரோஷா வைதான். ஆனால் இணைந்த கைகள் படத்தில் அப்போது கமிட் ஆகியிருந்ததால், நிரோஷா மறுத்துவிட்டார். அதே போல் கரகாட்டக்காரன் படத்தில் கனகா கேரக்டரில் நடிக்க கங்கை அமரன் முதலில் அணுகியது நிரோஷா வைதான். அதிலும் நடிக்க நிரோஷா மறுத்திருக்கிறார். இந்த 2 படங்களிலும் நிரோஷா நடித்திருந்தால், அவரது லெவலே தமிழ் சினிமாவில் வேறு மாதிரியாக போயிருக்கும். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இந்த விஷயங்களை சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார் நடிகை நிரோஷா.

- Advertisement -

சற்று முன்