- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தை பார்த்தவுடன் போன் போட்ட ரஜினி, எப்படி இந்த மாதிரி படம் எல்லாம் நடிக்கிறீங்க?...

அந்த படத்தை பார்த்தவுடன் போன் போட்ட ரஜினி, எப்படி இந்த மாதிரி படம் எல்லாம் நடிக்கிறீங்க? – ரஜினி கேள்வியால் ஆடிப்போன அந்த இளம் நடிகர்…

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், 45 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழ் சினிமாவில் இப்போதும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினி ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது என்று விஜய் சமீபத்தில் கூறினார். அது தன்னை சூப்பர் ஸ்டார் என்று சிலர் கூறிய சர்ச்சைக்காக மட்டுமல்ல, தன்னை சூப்பர் ஸ்டார் என நினைக்கும் அனைத்து நடிகர்களுக்கும் சேர்த்துதான் சொன்னார்.

ஏனெனில் ரஜினிகாந்தை பொருத்தவரை இப்போதும் கேமரா முன்பு நிற்கும்போது தன்னை முதல் படத்தில் நடிக்கும் ஒரு அறிமுக நடிகராக தான் நினைத்துக்கொள்வாராம். இதை அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, ரெஸ்ட் ரூம் செல்வதாக இருந்தாலும் டைரக்டரிடம் சென்று சொல்லிவிட்டுதான் செல்வது ரஜினி வழக்கம்.

- Advertisement -

இதை பார்த்து பல இயக்குநர்கள், இப்படி ஒரு உயர்ந்த மனநிலையில், சிறந்த பண்பாளராக இருக்கிறாரே என, அசந்து போயிருக்கின்றனர். தன்னை பார்க்கும் போதெல்லாம் எழுந்து நிற்கிறார் என்பதற்காகவே ரஜினி அமர்ந்திருக்கும் பகுதி வழியாக செல்லாமல், பின்வழியாகவே பலமுறை சுற்றிச் சென்றேன் என்று ஜெயிலர் பட விழாவில் இயக்குநர் நெல்சன் பேசியிருந்தார்.

அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் தனது சினிமா பயணம் மட்டுமின்றி சினிமாவில் புதிதாக வரும் இயக்குநர்கள், அவர்கள் தரும் படங்கள், இப்போது நடிக்கும் நடிகர்களின் படங்கள், எந்த மாதிரியான படங்களில் நடிக்கிறார்கள், எப்படிப்பட்ட படங்களை மக்கள் ரசிக்கிறார்கள், எந்த படம் தோல்வியடைகிறது, எந்த படம் வெற்றியடைகிறது என்பதை எல்லாம் கவனித்துக்கொண்டே இருப்பவர்.

- Advertisement -

அதனால் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நாள் நகர்வும் ரஜினிகாந்த் கவனத்தில் இருந்துக்கொண்டே இருக்கும். அதற்காக புதிதாக ரிலீஸ் ஆகும் படங்களை அவர் பார்த்து விடுகிறார். சினிமாத்துறையில் உள்ள பிரச்னைகள், தயாரிப்பாளர் பிரச்னைகள் என அனைத்து விஷயங்களும் அவருக்கு அடிக்கடி அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தை ரஜினிகாந்த் பார்த்திருக்கிறார். உடனே சிவகார்த்திேகயனுக்கு போன் செய்த ரஜினி, எப்படி இப்படி விதவிதமான படங்களில் நடிக்கிறீர்கள்? வித்யாசமான படங்களை தர வேண்டும் என்ற உங்கள் எண்ணம் பிடித்திருக்கிறது. இதில் நீங்கள் எனக்கு முன்னோடி என்று பாராட்டியிருக்கிறார். இந்த விஷயம் இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்