மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யாமேனன். தமிழில் மெர்சல் சைக்கோ மாலினி 22 பாளையங்கோட்டை ஓ காதல் கண்மணி திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகை தேசிய விருது கடந்தாண்டு வழங்கப்பட்டது.
இப்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கும் படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடித்து வருகிறார். அதே போல் திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை என்ற படத்திலும் அவர் இப்போது நடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்துள்ளார்.
இட்லி கடை படப்பிடிப்பு இப்போது ராமநாதபுரத்தில் நடந்து வருகிறது. இதில் நடிகர் அருண் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக தாய்லாந்து நாட்டில் ராஜ்கிரண் சத்யராஜ் தனுஷ் நித்யாமேனன் அருண் விஜய் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட இருந்தது.
ஆனால் அந்த காட்சி இன்னும் எடுக்கப்படாமல் உள்ளது. அதற்கு காரணம் தாய்லாந்து ஷூட்டிங்குக்கு நடிகை நித்யாமேனன் வராததே காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவரை ஷூட்டிங்குக்கு அழைத்தால் எனக்கு உடம்பு சரியில்லை, என்னால் வெளிநாடு வர முடியாது என்று மறுத்திருக்கிறார்.
அவருக்கு உடல் நலம் பாதிப்பு எதுவும் இல்லை. படத்தின் இயக்குனர் தனுஷ் மீது உள்ள கடுப்பால்தான் அவர் ஷூட்டிங்குக்கு வர மறுக்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதாவது இட்லி கடை படப்பிடிப்புக்கு கால்ஷீட் தந்த நித்யா மேனன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து இருந்திருக்கிறார்.
ஆனால் அப்போது நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்காமல், மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை இயக்குனர் தனுஷ் படம் பிடித்துள்ளார். இப்படி பல நாட்கள் நித்யா மேனனை சும்மா உட்கார வைத்து கால்ஷீட்டை வீணாக்கிய தனுஷ், இப்போது எக்ஸ்ட்ரா கால்ஷீட் கேட்டால் உடனே வரணுமா, என்ற கோபத்தில் நித்யாமேனன் வர மறுப்பதாக தெரிய வந்துள்ளது.





