விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. 65 நாட்களை இந்நிகழ்ச்சி தொட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக முதலில் 18 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக 5 பேர் அனுப்பப்பட்டனர். இதுவரை 12 பேர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் இருவர் வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டில் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களாக நடந்து முடிந்து, இப்போது 7வது சீசன் நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் டைட்டில் வின்னராக வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ. 50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
இதுவரை பிக்பாஸ் வின்னர்களாக ஆரவ், அசீம், ரித்விகா, முகின், ராஜூ, ஆரி ஆகியோர் வெற்றி பெற்றனர். ரன்னர்களாக கவிஞர் சிநேகன், பிரியங்கா, தர்ஷன், விக்ரமன், பாலாஜி, ஷிவின் ஆகியோர் ரன்னர்களாகவும் வெற்றி பெற்றனர். ஆனால் இதில் ரித்விகா, ராஜூ, அசீம் ஆகியோருக்கு டைட்டில் வின்னர் தரப்பட்டது சரியல்ல என அப்போதே பலத்த சர்ச்சை எழுந்தது.
ஆனால் இப்போது நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விட, மிக மிக மோசமாக இருப்பதாக, ரசிகர்கள் மற்றும் விஜய்டிவி பார்வையாளர்கள் வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர். அதுவும் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொள்வதும் ஒருவரை ஒருவர் மிகவும் தரம்கெட்ட வார்த்தைகளால் விமர்சிப்பதும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களையே முகம் சுளிக்க வைக்கிறது.
அதுவும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நிக்சன், ஏற்கனவே வினுஷா குறித்து உருவ கேலி செய்து பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே இன்று வெளியான பிரமோ ஒன்றில், அர்ச்சனாவை மிகவும் தரம்கெட்ட வார்த்தைகளால் நிக்சன் பேசுகிறார். அது மூஞ்சை பார்த்தியா, மூஞ்சை பார்த்தியா, என்ன வினுசா, வினுசான்னு எப்பவும் சொல்லிட்டு இருக்கே, சொருகிடுவேன் என்கிறார். அதாவது கொலை மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசி இருக்கிறார்.
பெட்டில் தூங்காமல் விழித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிக்பாஸ் வீட்டை விட்டு பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். ரெட்கார்டு கொடுத்து அவரை வெளியேற சொன்னவர் கமல்ஹாசன். இந்த வாரம், அர்ச்சனாவை சொருகிடுவேன் என்று சொன்ன நிக்சனை கண்டிப்பாரா, வெளியேற்றுவாரா இல்லை தத்துவம் பேசி அவருக்கு கமல் ஆதரவு தருவாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





