இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, கதையாக எடுத்துக் கொண்டால் இது ஒரு வித்தியாசமான கதை தான். ஆனால் அந்த கதையை படம் எடுத்த அவர்களே நம்பவும் இல்லை. அப்படி எடுத்துச் செல்லவும் இல்லை. ஹீரோவை அவரது அப்பா ஆர்கானிக்காக வளர்க்கிறார். ஹீரோயினை அவரது அம்மா அப்டேட் ஆக வளர்கிறார்.
கதைப்படி பார்த்தால் இதில் எது சரி என்று தான் சொல்லியிருக்க வேண்டும். இவர்கள் ஹீரோ வில்லன் கதையாக கொண்டு சென்று விட்டார்கள். திரைக்கதையில் எந்த சுவாரசியமும் இல்லை. இதில் காமெடி என்று சொல்லி நிறைய எடுத்து வைத்திருக்கிறார்கள். எதுவும் ஒர்க் ஆகவில்லை. எந்த எமோஷனலும் கனெக்ட் ஆகவில்லை.
படத்தில் ஒரு மறுவாழ்வு மையம் இருக்கிறது. அதில் எல்லோரும் தன்னார்வமாக சென்று சேர்ந்தார்களா, இல்லை தண்டமாக சேருகிறார்களா என்றும் சொல்லவில்லை. அனைத்தையும் டைரக்டர் மேம்போக்காக காட்டி இருக்கிறார். சிஜி வேலையில் மட்டும் மெனக்கெட்டு இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் படம் எப்போடா முடியும் என்று ஆகிவிட்டது.
இந்த படத்தை உட்கார்ந்து பார்ப்பதற்கான முக்கிய காரணம் ரவிவர்மனின் கேமரா ஒர்க்கை சொல்லலாம். இது காட்டு மொக்கையாக தான் இருக்கும் என்பதில் எந்த அதிர்ச்சியும் இல்லை. இந்த படத்தை எடுத்து முடித்துவிட்டு நல்ல ஒரு பாதுகாப்பான தேதியில் ரிலீஸ் செய்தால் சேதாரம் குறையும் என திட்டமிட்டார்கள். ஒரிஜினல் விஜய் படம் இல்லை. டூப்ளிகேட் விஜய் படமாக டிஎன் 2026 தான் வருகிறது. அதை ஊமை குத்தாக குத்தி விடலாம் என்றுதான் பிளான் போட்டார்கள்.
ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் ஒரிஜினல் விஜய் படம் ஜனநாயகன் படத்தை கொண்டு வந்து இறக்கி விட்டார்கள். ஜனநாயகம் படம் இணையத்தில் வீக்கானது வருத்தமான விஷயம் தான். இப்போது விக்னேஷ் சிவனின் மனக்குரல் என்னவாக இருக்கும்? என்கூட சரசம் செய்வதற்கென்றே உங்க அப்பா அம்மா உங்களைப் பெத்து விட்டாங்களா?
என்னுடைய முதல் படம் போடா போடி படம் வெளியான போது விஜய் நடித்த துப்பாக்கி படம் வந்து என் படத்தை காலி செய்தது. இப்போது கஷ்டப்பட்டு எல்ஐகே படத்தை ரிலீஸ் செய்தால் ஜனநாயகன் படத்தை லீக் செய்கிறீர்களே என்று தான் இருக்கும் என்றும் ப்ளு சட்டை மாறன் கிண்டலாக கூறியிருக்கிறார். பிரதீப் ரங்கநாதனின் மற்ற படங்களை போல எல்ஐகே படம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை வரவேற்பை பெறவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.





