- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்கத்தில் தனுஷ் பாணியை கையில் எடுக்கும் பா ரஞ்சித்... இந்த முறை சாத்தியமாகுமா இல்லை சறுக்குமா......

இயக்கத்தில் தனுஷ் பாணியை கையில் எடுக்கும் பா ரஞ்சித்… இந்த முறை சாத்தியமாகுமா இல்லை சறுக்குமா… ரசிகர்கள் கேள்வி…

- Advertisement -

இயக்குனர் பா ரஞ்சித் தற்போது தங்கலான் திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஹீரோவாக விக்ரம் நடித்திருக்கிறார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கோலார் தங்க வயலில் சுதந்திரத்திற்கு முன்பு அடித்தட்டு மக்கள் சுரண்டப்பட்ட அவலத்தையும், அதன் பின்னால் இருந்த சாதிய மனப்பான்மையையும் இந்த திரைப்படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் பா ரஞ்சித். இதில் விக்ரமுடன் பசுபதி பார்வதி மேனன் மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இதன் டீசர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக விக்ரமின் தோற்றம் இங்கு பலரையும் கவர்ந்துள்ளது. ஏறிய நெற்றியுடன், அடர்ந்த தாடியென மிரட்டலான லுக்கில் விக்ரம் இருந்தார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது.

இந்த திரைப்படம் ஏற்கனவே ஜனவரி 26 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வி எப் எக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால், இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. தற்போது, தேர்தலுக்குப் பிறகு தங்கலான் திரைப்படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்திற்குப் பிறகு யாரும் எதிர்பாராத நேரத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக பா ரஞ்சித் தெரிவித்தார். ஏற்கனவே இதன் முதல் பாகம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படத்தையும் அவர் இயக்க இருக்கிறார். பின்னர் சூர்யாவுடன் ஒரு படம், கார்த்தியுடன் ஒரு படத்தில் பா ரஞ்சித் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தை எடுப்பதற்கு முன்பாக, அட்டக்கத்தி தினேஷ்ஷை வைத்து புதிய படத்தை எடுக்க ரஞ்சித் திட்டமிட்டுள்ளாராம். வெறும் 45 நாட்கள்தான் இதன் சூட்டிங் நடைபெற இருக்கிறதாம். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை தனுஷ் குறுகிய நாட்களில் எடுத்ததை போல, பா ரஞ்சித்தும் இந்தப் படத்தை எடுக்க இருப்பதாக கூறி வருகின்றனர்.

சற்று முன்