- Advertisement -
Homeபொழுதுபோக்குகேப்டன் மகன் சண்முக பாண்டியனுக்கு ரசிகர்கள் தந்த வரவேற்பு - 3 நாட்களில் படை தலைவன்...

கேப்டன் மகன் சண்முக பாண்டியனுக்கு ரசிகர்கள் தந்த வரவேற்பு – 3 நாட்களில் படை தலைவன் படம் வசூல் நிலவரம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். புரட்சிக்கலைஞர் என்று ஆரம்பத்திலும் அதன்பிறகு கேப்டன் என்றும் தமிழ் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களாலும் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த விஜயகாந்த் தயாரிப்பாளராகவும் மாறினார்.

தனது நண்பர் இப்ராகிம் ராவுத்தருடன் இணைந்து பல படங்களை சொந்தமாகவும் விஜயகாந்த் தயாரித்தார். மேலும் புதுமுக இயக்குனர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கினார். தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக ஆளுமை மிக்க மனிதராக விஜயகாந்த் வலம் வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு இருந்த கடனை கலை நிகழ்ச்சி அடைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் படப்பிடிப்பு தளத்தில் நட்சத்திர நடிகர் முதல் லைட்மேன் வரை அனைவருக்கும் ஒரே விதமான உணவு முறை வழக்கத்தை கொண்டு வந்தவர் கேப்டன். சினிமாவில் பெரிய அளவில் புகழ் பெற்ற விஜயகாந்த் அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டினார். தேமுதிக என்ற அரசியல் கட்சியை துவங்கி தமிழக அரசியலில் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவராக மாறினார்.

ஆனால் துரதிஷ்டவசமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவரது 2 மகன்களில் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடிகராக இருக்கிறார். கடந்த 2015ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான சகாப்தம் படம் மூலம் அவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து மதுரைவீரன் என்ற படத்தில் அவர் நடித்தார். இந்த 2 படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதன்பின் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து தற்போது சண்முக பாண்டியன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் படை தலைவன். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அன்பு டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் கஸ்தூரிராஜா முனீஸ்கான் யாமினி சந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

மேலும் ஏஐ தொழில்நுட்பத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்திருக்கிறார். படை தலைவன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 13ம் தேதி இந்த படம் வெளியான நிலையில் 3 நாட்களில் படை தலைவன் 3.9 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. நல்ல பாசிட்டிவ் விமர்சனங்கள் இருப்பதால் இந்த படம் இன்னும் அதிக வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்