- Advertisement -
Homeபொழுதுபோக்குபடை தலைவன் படம் நாளை ரிலீஸ் இல்லை… வெளியீட்டு தேதியை பின்னர் அறிவிக்கிறோம் - படத்தின்...

படை தலைவன் படம் நாளை ரிலீஸ் இல்லை… வெளியீட்டு தேதியை பின்னர் அறிவிக்கிறோம் – படத்தின் நாயகன் சண்முக பாண்டியன் தகவல்!

- Advertisement -

நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். சகாப்தம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து மதுரை வீரன் என்ற படத்திலும் நடித்தார். ஆனால் இந்த 2 படங்களுமே பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இப்போது சண்முக பாண்டியன் படை தலைவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இயக்குனர் அன்பு இயக்கத்தில் உருவான இந்த படத்தின் சண்முகபாண்டியன் நாயகனாக நடித்திருக்கிறார். யானையை மையப்படுத்திய ஒரு கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உளளது. இயக்குனர் கஸ்தூரி ராஜா எம் எஸ் பாஸ்கர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் முக்கிய அம்சமாக மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் சில காட்சிகளில் வருகிறார். அதனால் கேப்டனை மீண்டும் திரையில் பார்க்கும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஏனெனில் வெங்கட்பிரபு இயக்கிய தி கோட் படத்தில் விஜயகாந்தை ஒரு நிமிடம் கூட சரியாக காட்டாமல் விட்டுவிட்டனர்.

இந்த படத்தில் ஹீரோ சண்முக பாண்டியன் யானை பாகன் கேரக்டரில் நடித்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதமே இந்த படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் நிறைய படங்கள் ரிலீஸ் காரணமாக இந்த படத்தை மே 23ம் தேதி ( நாளை) ஒத்தி வைத்தனர். படத்தின் டிரெய்லர் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் நாளை படை தலைவன் படம் ரிலீஸ் ஆகாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து படை தலைவன் படத்தின் நாயகன் சண்முக பாண்டியன் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம். படை தலைவன் திரைப்படம் நாளை 23ம் தேதி வெளியாக இருந்த நிலையில், தியேட்டர் ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக படம் வெளியீடு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

படை தலைவன் படத்தின் புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி என்று அந்த பதிவில் நடிகர் சண்முக பாண்டியன் கூறி இருக்கிறார். இந்த படத்துக்காக ரூ. 10 கோடி வரை பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையும் இதற்கு பின்னால் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்