- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சிவகார்த்திகேயன் போட்ட திடீர் கண்டிஷன், உடனே ஓகே சொன்ன பராசக்தி படக்குழு - ...

நடிகர் சிவகார்த்திகேயன் போட்ட திடீர் கண்டிஷன், உடனே ஓகே சொன்ன பராசக்தி படக்குழு – எஸ்கேவை பாராட்டும் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

அமரன் படம் தந்த அபார வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்துக்கு பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஸ்ரீ லீலா அதர்வா மற்றும் ரவி மோகன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த 1960-65 களில் இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தது. இதில் ராசேந்திரன் என்ற மாணவர், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். அவரது வாழ்க்கையை கதையை மையப்படுத்தி பராசக்தி படம் உருவாகிறது. மொழிப்போர் தியாகியாக போற்றப்படும் ராசேந்திரன் பயோபிக்கில் அவரது கேரக்டரில்தான் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக மாறிவிட்டார். இப்போது அவர் நடித்துவரும் ஜனநாயகன் படத்துக்கு பிறகு, நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அவர் முழுநேர அரசியல்வாதியாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட இருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவியை அடைவதே தன் லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் விஜய் விட்டுச் செல்லும் இடத்தை அடுத்து பிடிக்கப் போவது நடிகர் சிவகார்த்திகேயன். அதற்கு உதாரணமாக தான், தி கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்த போது, துப்பாக்கியை பிடிங்க சிவா என விஜயே அவரிடம் துப்பாக்கியை கொடுப்பது போன்ற காட்சி வந்தது என, எஸ்கே ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் துப்பாக்கி படம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த மாபெரும் வெற்றிப் படமாகும்.

- Advertisement -

இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படமும், விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படமும் 2026ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு ஒன்றாக ரிலீஸாகும் என்று சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இதைக் கேள்விப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயன், நிச்சயமாக என்னுடைய படமும், தளபதி படமும் ஒரே நாளில் ஒன்றுக்கு ஒன்று போட்டியாக ரிலீஸ் ஆகவே கூடாது.

ஜனநாயன் படம் ரிலீஸாவதற்கு முன்பே என்னுடைய படம் ரிலீஸை திட்டமிடுங்கள் என்று இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழுவினரிடம் கண்டிஷனாக சொல்ல, அவர்களும் ஓகே சொல்லி விட்டனர். வருகிற செப்டம்டர் மாதத்துக்குள் பராசக்தி படப்பிடிப்பை முடிப்பது என்றும், அதற்கிடையே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் பாதியில் நிற்கும் எஸ்கே படத்தின் ஷூட்டிங் 40 நாட்கள் நடக்கிறது. அந்த 40 நாட்களில் படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளை முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால் பராசக்தி தீபாவளி ரிலீஸ் என்பது உறுதியாகி விட்டது.

- Advertisement -

சற்று முன்