- Advertisement -
Homeபொழுதுபோக்குபராசக்தி படம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் செய்யப் போகும் தரமான சம்பவம் -...

பராசக்தி படம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் செய்யப் போகும் தரமான சம்பவம் – லேட்டஸ்ட் அப்டேட் சுடச்சுட வந்தாச்சு!

- Advertisement -

ஆரம்பத்தில் டிவியில் ஆங்கராக இருந்து பிறகு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா அவரது முதல் படம். கடந்த 13 ஆண்டுகளில் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். குறிப்பாக அமரன் படம் அவரது இமேஜை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வருகிற 2026 ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகை ஸ்ரீலீலா மற்றும் நடிகர்கள் ரவி மோகன் அதர்வா குரு சோமசுந்தரம் பசில் ஜோசப் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சுதா கொங்கரா டைரக்ட் செய்திருக்கிறார். ரெட் ஜெயிண்ட் முவீஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

- Advertisement -

பராசக்தி படம் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்த 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் பராசக்தி 25வது படமாகும். இந்நிலையில் பராசக்தி படம் இசை வெளியீட்டு விழா குறித்து முக்கிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. ஏனெனில் கடந்த பல நாட்களாக இந்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இப்போது லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.

ஏனெனில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்தான் இந்த விழா நடக்க முடிவானது. ஆனால் அங்கு முக்கிய விளையாட்டு குறிப்பிட்ட தேதியில் நடப்பதால் இடம் கிடைக்கவில்லை. அதனால் திருச்சி அல்லது மதுரையில் இந்த விழா நடத்த ஆலோசிக்கப்பட்டது. இதனால் இசை வெளியீட்டு விழா எங்கே எப்போது என்பதில் பராசக்தி படக்குழுவினருக்கே குழப்பம் நீடித்தது.

- Advertisement -

இந்நிலையில் வருகிற ஜனவரி 3ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் வெளிப்புற திறந்தவெளி மைதானத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. இதில் பராசக்தி படத்தில் அறிமுகமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட உள்ளது. இந்த விழாவில் ராம்குமார் மற்றும் பிரபு விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் பங்கேற்ற உள்ளனர்.

மேலும் பராசக்தி படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படம் என்பதால் இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த 24 படங்களின் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களும் இந்த விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேடையில் நடிகர் சிவகார்த்திகேயன் பொன்னாடை போர்த்தி தன் கையால் நினைவுப் பரிசை வழங்கி கௌரவிக்க உள்ளார்.

- Advertisement -

சற்று முன்