- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி, கமலுடன் நடிக்க மறுத்த சின்னத்திரை செலிபரட்டி பெப்ஸி உமா, பார்சலில் அவருக்கு வந்த அந்த...

ரஜினி, கமலுடன் நடிக்க மறுத்த சின்னத்திரை செலிபரட்டி பெப்ஸி உமா, பார்சலில் அவருக்கு வந்த அந்த பொருள் – இது வேற லெவலா இருக்குதே உமா மேடம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்புதான். குஷ்புவுக்கு கோவில் கட்டிய தமிழ் சினிமா ரசிகர்கள் என்ற பாராட்டப்படும் அளவுக்கு ரசிகர்களின் நிலை இருந்திருக்கிறது. இப்போதும் ரசிகர்கள், எல்லை மீறிய நிலையில்தான் அவர்களது செயல்பாடு இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு, ஒரு காலகட்டத்தில் ரத்தத்தில் கடிதம் எழுதும் ரசிகர்கள் இருந்திருக்கின்றனர். அதுபோல் நடிகைகளை மனதார காதலிக்கும் ரசிகர்களும் பலர் உண்டு. ஆனால், டிவியில் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பங்கேற்ற ஒருவரை, சினிமா நடிகையை விட அதிகமாக ரசித்த ஒரு கூட்டம் 1990களில் இருந்தது என்றால் அது மாபெரும் உண்மைதான்.

- Advertisement -

அது பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை நடத்திய சின்னத்திரை செலிபரட்டி பெப்ஸி உமாதான். அவரை பார்க்கவும், அவரது இனிமையான குரலை கேட்கவும் அந்த காலகட்டத்தில் டிவி முன் தவம் இருந்தவர்கள் உண்டு. அவருடன் அந்த டிவி நிகழ்ச்சியில் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் போனில் தொடர்ந்து முயற்சித்தவர்கள் பலர் உண்டு.

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த பெப்ஸி உமாவுக்கு சினிமாவில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ரஜினி, கமல் போன்ற ஸ்டார் நடிகர்கள் படத்தில் நடிக்கவும் அவருக்கு அழைப்புகள் வந்தன. அதை அவர் மறுத்துவிட்டார். ஒருமுறை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் விளம்பர படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் பெப்ஸி உமா ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படிப்பட்ட அவர், திடீரென சின்னத்திரையில் இருந்து காணாமல் போனார். கடந்த 20 ஆண்டுகளாக மாயமாகி இருந்த அவர், சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார். அவரை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் அவரை அருகில் சென்று பார்த்து, பேசி , நலம் விசாரித்து நட்பை புதுப்பித்துக்கொண்டனர். அவர் அந்த விழாவில் மேடை ஏறிய போது விசில் சத்தமும், கைதட்டலும் அரங்கமே அதிர்ந்தது.

இதற்கிடையே ஒரு நிகழ்வில் பங்கேற்ற பெப்ஸி உமா, தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். அவர் மீது தீராத அன்பும், பாசமும் கொண்ட ரசிகை ஒருவர் பெப்ஸி உமாவுக்கு பார்சல் அனுப்பி இருக்கிறார். அந்த பார்சலில் அந்த ரசிகையின் சுண்டுவிரல் இருந்துள்ளது. இதைப்பார்த்து பலத்த அதிர்ச்சியடைந்த அவர், அந்த ரசிகையை தொடர்புகொண்டு கடுமையான கோபத்தில் திட்டி இருக்கிறார். ஆனால், இவ்வளவு அன்புக்குரிய அவர் மீண்டும் சின்னத்திரையில் தோன்ற மாட்டாரா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இப்போதும் உள்ளது.

- Advertisement -

சற்று முன்