அரசியல் வாரிசுகளை போல சினிமாவிலும் வாரிசுகள் வருவது பல காலமாக நடந்து வருகிறது. அன்று சிவாஜி கணேசன் மகன் பிரபுவும் முத்துராமன் மகன் கார்த்திக்கும் நடிக்க வந்தனர். அதன்பிறகு பிரபு மகன் விக்ரம் பிரபுவும் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்துவிட்டனர். இதே போல் தமிழ் சினிமாவில் பல வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர்.
உதாரணமாக மறைந்த நடிகர் முரளி மகன்கள் அதர்வா ஆகாஷ் நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் வினய் மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிகர் சிவக்குாரின் மகன்கள் சூர்யா கார்த்தி இயக்குனர் கஸ்தூரி ராஜா மகன் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகும்.
இந்த சினிமா வாரிசு வரிசையில் சமீபத்தில் களத்தில் இறங்கியிருப்பவர் நடிகர் சூர்யா விஜய் சேதுபதி. பீனிக்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியின் மகனான இவர், ஏற்கனவே அவரது தந்தையுடன் சிந்துபாத் என்ற படத்தில் சிறுவனாக நடித்திருந்தார். இப்போது பீனிக்ஸ் என்ற படத்தில் நாயகனாக அறிமுகாகி இருக்கிறார்.
ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகி உள்ள பீனிக்ஸ் படத்தில் சூர்யா விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் தேவதர்ஷினி ஆடுகளம் நரேன் சம்பத் ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் சிறார் சீர்த்திருத்த பள்ளியில் கொலை செய்த ஒரு கைதி கேரக்டரில் சூர்யா விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
பீனிக்ஸ் படத்தை டைரக்ட் செய்தது ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு என்பதால் படத்தின் ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறது. அதனால் இந்த படம் சண்டை பிரியர்களுக்கு முழு திருப்தி அளிக்கும் ஒரு படமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு இந்த படம் போதிய திருப்தி தரவில்லை. குறிப்பாக விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிப்பில் பெரிய உற்சாகம் ரசிகர்களுக்கு கிடைக்கவில்லை.
பீனிக்ஸ் படம் ரிலீஸான முதல் நாளில் ரூ. 10 லட்சம் மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டமின்றி படம் காற்று வாங்குகிறது. கடந்த 4ம் தேதி ரிலீஸான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு இல்லாததால் இந்த படம் தோல்வி படங்கள் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டது. பபிள்கம் ஹீரோவுக்கு முதல் படமே இப்படி மொக்கையாகி தோல்வியை சந்தித்து விட்டதே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





