- Advertisement -
Homeபொழுதுபோக்கு8 மாதங்கள் தாமதமாக வருகிறார், 16 அடி பாய்வாரா…? - விஜய் சேதுபதி மகன்...

8 மாதங்கள் தாமதமாக வருகிறார், 16 அடி பாய்வாரா…? – விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்த பீனிக்ஸ் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய வெறறியை பெற்றது. தொடர்ந்து அவரது நடிப்பில் டிரெயின் ஏஸ் மற்றும் ஆகாச வீரன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கின்றன. நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகி விட்டார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் பீனிக்ஸ் விழான். இந்த படம் மூலம் இளம் நாயகனாக தமிழ் சினிமாவுக்குள் அவர் வருகிறார். இந்த படத்தை சண்டை பயிற்சியாளர் அனல் அரசு டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்தின் மூலமாக அனல் அரசு இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

- Advertisement -

பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்துக்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பீனிக்ஸ் படத்தின் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார் தேவதர்ஷினி மற்றும் நடிகர் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாடலான யாராண்ட என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. விதியா தாமேந்திரன் எழுதிய வரிகளுக்கு சான் சி எஸ் இசையமைத்துள்ளார்.

பீனிக்ஸ் படத்தின் டீசரில் முதல் காட்சியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியுடன் காட்சி தொடங்கியது. கையில் விலங்குடன் குற்றவாளியாக சீர்திருத்த பள்ளியில் முகத்தை மூடிய நிலையில் சூர்யா காணப்படுகிறார். ஒரு பாக்ஸிங் வீரரை போல சண்டைக் காட்சிகளில் அவர் காட்டப்பட்டு இருந்தார்.
ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி பீனிக்ஸ் படம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 6 மாதங்களாகியும் இந்த படம் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் இப்போது பீனிக்ஸ் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஜூலை 4ம் தேதி பீனிக்ஸ் படம் தியேட்டர்களில் வெளியாகிறது.

கடந்தாண்டு நவம்பர் 14ம் தேதி வெளியாக வேண்டி இந்த படம் 8 மாதங்கள் தாமதமாக ஜூலை 4ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 8 மாதங்கள் தாமதமாக வெளியாகும் இந்த படம், தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதைப் போல இந்த படத்தில் கதாநாயகன் சூர்யா, நடிகர் விஜய் சேதுபதியின் மகன் என்பதை நிரூபித்துக் காட்டி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்