- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிகாந்துடன் திடீர் சந்திப்பு நடத்திய கவிஞர் வைரமுத்து, அரசியல் குறித்து பேசியதாகவும் பதிவில் அவரே...

நடிகர் ரஜினிகாந்துடன் திடீர் சந்திப்பு நடத்திய கவிஞர் வைரமுத்து, அரசியல் குறித்து பேசியதாகவும் பதிவில் அவரே தகவல் – ஒருவேளை அவர் பற்றி விவாதித்திருப்பார்களா?

- Advertisement -

திரைப்பட பாடல் ஆசிரியர் என்ற அடையாளத்தை கடந்து பல பெருமைகளை கொண்டவர் கவிஞர் வைரமுத்து. கவிஞராக அவர் படைத்த கவிதைகள் எப்போதும் சாகா வரம் பெற்றவை என்றால் அது மிகையல்ல. ஒரு எழுத்தாளராக அவர் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் 3ம் உலகப்போர் போன்ற நூல்கள் பொக்கிஷம் போன்றவை.

கவிஞர் வைரமுத்து மேடையில் பேசினால், மணிக்கணக்கில் அவரது பேச்சை ரசித்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். அழகு தமிழில் அவரது பேச்சில் தெரியும் கம்பீரமும், கவிநயமும், உடைநடை அழகும் சிறந்த பேச்சாற்றல் கொண்ட பேச்சாளராக ரசிக்க வைத்திருக்கின்றன. திமுகவின் அபிமானியாக இருப்பவர். கருணாநிதியின் அன்புக்கும், ஸ்டாலினின் நட்புக்கும் நெருக்கமானவர்.

- Advertisement -

கவிஞர் வைரமுத்து மீதான சர்ச்சையான சில குற்றச்சாட்டுகளை கடந்துவிட்டு தனிமனிதராக அவர் மீதான அந்த விமர்சனங்களை தள்ளி வைத்துவிட்டு பார்த்தால், கவிஞர் வைரமுத்து தன்னிகரில்லாத ஒரு பேராற்றல் கொண்ட சிறந்த கவிஞர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவரது படைப்புகளும், பாடல்களுமே அதை தெளிவாக சொல்லிவிடும்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை கவிஞர் வைரமுத்து இன்று சந்தித்து பேசியிருக்கிறார். ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கு மேல் அவரது உரையாடல் நீடித்திருக்கிறது. இதில் பலதரப்பட்ட விஷயங்களை மனம் விட்டு இருவரும் பேசியதாக வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் கவிதை நடையில் குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

அந்த பதிவில், கடிகாரம் பாராத உரையாடல், சில பேரோடுதான் வாய்க்கும். அவருள் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 80 நிமிடங்கள் உரையாடி இருக்கிறோம். ஒரே ஒரு கிரீன் டீயை தவிர எந்த இடைஞ்சலும் இல்லை, இடைவெளியும் இல்லை. சினிமாவின் அரசியல், அரசியலின் சினிமா; வாழ்வியல் – சமூகவியல் கூட்டணி கணக்குகள், தலைவர்கள், தனிநபர்கள் என்று எல்லா தலைப்புகளும் எங்கள் உரையாடலில் ஊடாடி ஓய்ந்தன. எதுகுறித்தும் அவருக்கு ஒரு தெளிவு இருக்கிறது. தன் முடிவின் மீது உரசி பார்த்து உண்மை காணும் குணம் இருக்கிறது.

நான் அவருக்கு சொன்ன பதில்களை விட அவர் கேட்ட கேள்விகள் மதிப்பு மிக்கவை. தவத்திற்கு ஒருவர் தர்க்கத்திற்கு இருவர்; நாங்கள் தர்க்கத்தையே தவமாக்கிக் கொண்டோம். ஒரு காதலியை பிரிவது போல் விடைகொண்டு வந்தேன். இரு தரப்புக்கும் அறிவும் சுவையும் தருவதே ஆரோக்கியமான சந்திப்பு; அது இது என்று வைரமுத்து கூறியிருக்கிறார். கண்டிப்பாக அரசியல் கட்சி தலைவராக உள்ள விஜய் குறித்தும் இந்த உரையாடலில் பேசியிருக்கிறோம் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்