- Advertisement -
Homeபொழுதுபோக்குநகரின் முக்கிய பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட அந்த நடிகரின் ரசிகர்கள்... புகாரை தொடர்ந்து கைது செய்தது...

நகரின் முக்கிய பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட அந்த நடிகரின் ரசிகர்கள்… புகாரை தொடர்ந்து கைது செய்தது காவல்துறை… இதெல்லாம் தேவையா பாஸ்…

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் நடிகர்களின் ஒருவராக இருந்து வருகிறார் அல்லு அர்ஜுன். அவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளன. இதன் காரணமாக அவருக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

2001 ஆம் ஆண்டு திரைத்துறையில் வந்த அவருக்கு, மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் ஆர்யா 2. அங்கிருந்து வெற்றி பாதையில் பயணித்து வரும் அல்லு அர்ஜுன், 2020 ஆம் ஆண்டு அலவைகுண்டபுரமலு திரைப்படத்தைக் கொடுத்து அலற விட்டார்.

- Advertisement -

அல்லு அர்ஜுனை மிகச் சிறந்த பான் இந்தியா நடிகராக அழைத்துச் சென்ற திரைப்படம் புஷ்பா. 2021 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் தமிழ் மலையாளம் இந்தி திரையுலகிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக அல்லு அர்ஜுனின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

ஒரு கையை ஏற்றி இறக்கியவாறு படம் முழுவதும் புஷ்பராஜ் கேரக்டரில் நடித்திருந்த அவர், ஒவ்வொரு சீனையும் உயிர்ப்புடன் நடித்து அந்த கேரக்டருக்கு வலிமை கூட்டியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக மத்திய அரசு அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வழங்கி கௌரவித்தது.

- Advertisement -

தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. அனேகமாக இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் தற்போது இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. அல்லு அர்ஜுனுக்கு ஆந்திராவையும் தாண்டி கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பெங்களூருவில், அல்லு அர்ஜுனை எதிர்த்துப் பேசிய ஒருவரை ரசிகர்கள் கடுமையாக தாக்கும் காட்சி வெளியாகி உள்ளது. அவர்கள் ஜெய் அல்லு அர்ஜுன் எனக் கூறுமாறு வலியுறுத்தி அந்த நபரை ரத்தம் வரும் அளவுக்கு தாக்கினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதே சமயம் ஒரு நடிகருக்காக இப்படியா அடித்துக் கொள்வது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்