- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரிஷா விவகாரம் முடிஞ்சு போச்சு, குஷ்புவுக்கு பிரச்னை ஸ்டார்ட் ஆயிடுச்சு - குஷ்பு வீட்டின் முன்...

திரிஷா விவகாரம் முடிஞ்சு போச்சு, குஷ்புவுக்கு பிரச்னை ஸ்டார்ட் ஆயிடுச்சு – குஷ்பு வீட்டின் முன் குவிக்கப்பட்ட போலீசார்

- Advertisement -

நடிகை குஷ்பு, துவக்கத்தில் தமிழ் சினிமா நடிகையாக மட்டுமே இருந்து பல படங்களில் நடித்தார். அப்போதும் அதிக கவர்ச்சி காட்டி நடித்ததால், பெண்கள் இவரை விமர்சிக்க செய்தனர். ஒரு கட்டத்தில் கதாநாயகி நடித்து வந்த குஷ்பு சில படங்களில் ஐயிட்டம் பாடல்களுக்கும் நடனமாடினார்.

ஒரு கட்டத்தில் பிரபு, குஷ்பு ரகசிய திருமணம் செய்ததாக முக்கிய தினசரி நாளிதழில் முதல் பக்கத்தில் திருமண கோலத்தில் புகைப்படத்துடன் தலைப்பு செய்தி வெளியானது. இதுவும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. குஷ்புவுக்கு கோவில் கட்டியதாக கூறப்பட்ட அந்த காலகட்டத்தில் இது ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது வதந்தி என்று சொல்லப்பட்டது.

- Advertisement -

இதையடுத்து சுந்தர் சியை திருமணம் செய்த குஷ்பு, குடும்பம், கணவர், குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார். அத்துடன் முதலில் திமுக, பிறகு காங்கிரஸ், இப்போது பாஜக என அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக உள்ள குஷ்பு, திரிஷா மன்சூர் அலிகான் விவகாரத்தில் எதிர்ப்பை, கண்டனத்தை தெரிவித்தார்.

இதுகுறித்த ஒரு பதிவில், திரிஷா விவகாரத்தில் ஆர்வம் காட்டிய நீங்கள், மணிப்பூர் சம்பவங்கள் பெண்கள் அவமதிக்கப்பட்ட போது, என்ன செய்தீர்கள் என்று ஒருவர் கேட்க, அதற்கு சேரி மொழியில் அதற்கு பதிலளிக்க முடியாது, என குஷ்பு கூறியது பயங்கர வைரலானது. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பும், கண்டனமும் கிளம்பியது.

- Advertisement -

இதுகுறித்து சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், இதுகுறித்து பொது மன்னிப்பு கேட்காவிட்டால் குஷ்பு வீட்டை முற்றுகையிடுவோம், அவர் தமிழகத்தில் எங்கும் வெளியில் நடமாட முடியாது எனவும் காங்கிரஸ் கட்சியின் எஸ்சிஎஸ்டி பிரிவு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து தொடர்ந்து குஷ்புவுக்கு போனில் மிரட்டல்கள் வந்ததையடுத்து சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள குஷ்பு வீட்டுக்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐ உட்பட 36 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இது தமிழ் சினிமா வட்டாரத்திலும், பாஜகவினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்