- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிக்கு முன்பாக கமலுடன் இணைந்து நடிக்கப் போகும் ஹீரோ யார் தெரியுமா? - அட இது...

ரஜினிக்கு முன்பாக கமலுடன் இணைந்து நடிக்கப் போகும் ஹீரோ யார் தெரியுமா? – அட இது வேற லெவல் சம்பவமா இருக்குதே?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தக்லைஃப் படத்துக்கு பிறகு இப்போது ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு முன்பாக இந்தியன் 3 படத்தின் ஒரு மாத படப்பிடிப்பு பெண்டிங்கில் உள்ளது. இந்த படங்களை தொடர்ந்து கமல்ஹாசன், ரஜினியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்.

கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி கமல் இணைந்து நடித்த படம் நினைத்தாலே இனிக்கும். அந்த படத்துக்கு பிறகு இப்போதுதான் ரஜினி கமல் இருவரும் இணைய உள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக உள்ளது.

இதற்கிடையே நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் உருவாகும் படம் சேயோன். தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படம் வரும் ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மதுரை உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடிப்பதாக ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. முருகன் விருமாண்டி என்ற 2 கேரக்டர்களை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் முருகனாக சிவகார்த்திகேயனும் விருமாண்டியாக கமலும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்போது ஹீரோக்கள் இணைந்து நடிப்பது தமிழ் சினிமாவில் பேஷனாக மாறிவிட்டது. சிவகார்த்திகேயன் ரவி மோகன் இணைந்து பராசக்தி படத்தில் நடித்தார்கள். ஏற்கனவே விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார். மோகன்லால் மம்முட்டி போன்ற நட்சத்திர ஹீரோக்கள் தமிழ் ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கின்றனர்.

அந்த வகையில் ரஜினிக்கு முன்பாக கமல்ஹாசன், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இரண்டு மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் படமாக சேயோன் படம் உருவாகும் என்பதால் கணிசமான வியாபார லாபம் கிடைக்கும் என்பதால் சேயோன் படத்துக்கு வணிக ரீதியாக நல்ல வரவேற்பும் போட்டியும் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

சற்று முன்