- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்திப்பாரா தமிழக முதல்வர் விஜய் -...

நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்திப்பாரா தமிழக முதல்வர் விஜய் – ரசிகர்கள் மத்தியில் எகிறும் எதிர்பார்ப்பு!

- Advertisement -

தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய் தொடர்ந்து தரமான சம்பவங்களை செய்து வருகிறார். அதிலும் யாருமே சிறிதும் எதிர்பார்க்காத சில விஷயங்களை முதல்வர் விஜய் செய்வது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் பலத்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இது எல்லாமே தரமான சம்பவம்தான் என்றும் பலதரப்பட்ட மக்களும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக திமுகவை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்தவர் விஜய். திமுக தலைவரை ஸ்டாலின் அங்கிள் என்றும் திமுக ஒரு தீய சக்தி என்றும் என்னுடைய அரசியல் எதிரி திமுக தான் என்றும் தவெக கூட்டங்களில் பேசியவர் விஜய். ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என்பதை ஒரு தாரக மந்திரமாகவே தேர்தல் நேரத்தில் மக்கள் மனங்களில் பதிய செய்தவர்.

- Advertisement -

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேற்று தமிழக முதல்வர் விஜய் சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து வைகோ அன்புமணி ராமதாஸ் சீமான் உள்ளிட்ட கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். எடப்பாடி பழனிசாமி தொல் திருமாவளவனையும் அவர் இன்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சினிமாவில் விஜய் உச்ச நட்சத்திரமாக இருந்த போது யார் சூப்பர் ஸ்டார் என்கிற பஞ்சாயத்து ரஜினி விஜய் இருவருக்கும் இடையே எழுந்தது. அப்போது ரஜினி சொன்ன காக்கா கழுகு கதையும் பெரிய அளவில் விவகாரமாக மாறி ரஜினி விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது.

- Advertisement -

மேலும் சட்டசபை தேர்தலில் தவெக ஜெயித்த போது திமுக அதிமுக கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியில் ஆட்சி அமையுங்கள் என்று ரஜினி சொன்னதாகவும் ஒரு வதந்தி பரவியது. இது மேலும் அரசியல் களத்தில் பரபரப்பபை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழக முதல்வர் விஜய் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்திப்பாரா என்ற கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களையே அவர்களது இல்லத்தில் சென்று சந்தித்து வரும் முதல்வர் விஜய், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஏற்கனவே யார் சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்து முற்றுப்பெற்ற நிலையில், ரஜினியுடன் இணக்கமான நட்பை தொடரும் விதமாக நடிகர் ரஜினிகாந்தை முதல்வர் விஜய் விரைவில் நேரில் சந்திக்கலாம் என்று ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்